Home > NEWS > வலை­த­ளத்தில் உணவு விற்­ப­னைக்கு புதிய விதி­மு­றைகள்

வலை­த­ளத்தில் உணவு விற்­ப­னைக்கு புதிய விதி­மு­றைகள்

22,September, 2016

புது­டில்லி : வலை­தளம் வாயி­லான உணவுப் பொருட்கள் விற்­ப­னைக்கு, புதிய வரைவு விதி­மு­றை­களை, இந்­திய உணவு பாது­காப்பு மற்றும் தரங்கள் ஆணையம் வெளி­யிட்டு உள்­ளது.
அதன் விபரம்:* வலை­தளம் மூலம், உணவுப் பொருட்கள் வர்த்­த­கத்தில் ஈடு­பட்டு வரும் அனைத்து நிறு­வ­னங்­களும், அவற்றின் விற்­பனை, வினி­யோகம், கிடங்கு உள்­ளிட்ட அனைத்து செயல்­பாடு­ க­ளுக்கும், உரிமம் பெற வேண்டும்* பிளிப்கார்ட், அமேசான், ஸ்நாப்டீல் போன்ற வலை­தள சந்தை நிறு­வ­னங்கள், விற்­ப­னை­யா­ள­ருக்கும், நுகர்­வோ­ருக்கும் இடையே, பால­மாக செயல்­ப­டு­வதால், அவை, உரிமம் பெற தேவை­யில்லை * வலை­தள சந்தை நிறு­வ­னங்கள், தங்கள் மூலம் உணவுப் பொருட்­களை விற்­பனை செய்­வோ­ரிடம், உணவு பாது­காப்பு சட்­டத்தின் கீழ், உரிய விதி­மு­றை­களை பின்­பற்றி, உணவுப் பொருட்கள் தயா­ரிக்­கப்­ப­டு­வதை உறுதி செய்ய வேண்டும். இதற்­காக, சட்­டப்­பூர்வ ஒப்­பந்தம் செய்து கொள்ள வேண்டும்* உணவுப் பொருட்­களின் மேலு­றையில், உணவு பாது­காப்பு ஆணை­யத்தின் உரிமம் அல்­லது பதிவு செய்­யப்­பட்ட விப­ரங்­களை, நுகர்வோர் எளிதில் காணும் வகையில் அச்­சிட வேண்டும்* உணவுப் பொருட்­களின் விபரம் குறித்து, வினா எழுப்பும் நுகர்­வோ­ரிடம், தயா­ரிப்பு நிறு­வ­னங்கள் பணம் வசூ­லிக்கக் கூடாது* வலை­தள சந்தை நிறு­வ­னங்கள், நுகர்வோர் தெரி­விக்கும் புகார்­களை, உட­ன­டி­யாக, உணவு தயா­ரிப்பு நிறு­வ­னங்­க­ளுக்கு அனுப்பி, உரிய தீர்வு காண உதவ வேண்டும்* விற்­பனை செய்­யப்­பட்ட உணவுப் பொருட்கள், திரும்பப் பெறப்­ப­டும்­பட்­சத்தில், உட­ன­டி­யாக, தன் அட்­ட­வ­ணையில் இருந்து அப்­பொ­ருளை, வலை­தள சந்தை நிறு­வ­னங்கள் நீக்க வேண்டும்.

Categories: NEWS
%d bloggers like this: