Home > Cuddalore, DISTRICT-NEWS > திட்டக்குடியில் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்

திட்டக்குடியில் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்

7,October, 2016

IMG-20161007-WA0043

திட்டக்குடி : திட்டக்குடியில் உணவு பொருள் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு விளக்க ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை மற்றும் நகர அனைத்து வணிகர்கள் நலச்சங்கம் சார்பில் உணவுப்பொருள் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு விளக்க ஆலோசனைக் கூட்டம் திட்டக்குடியில் நடந்தது. வணிகர் சங்க மாவட்ட துணைத்தலைவர் ராஜன் தலைமை தாங்கினார்.

மண்டல மாவட்டத் தலைவர் சண்முகம், துணைத்தலைவர் சண்முகம், மாநில இணைச் செயலர் தங்கராசு முன்னிலை வகித்தனர். உணவு பாதுகாப்பு மற்றும் நிர்வாகத் துறையின் மாவட்ட அலுவலர் டாக்டர் ரவி, வியாபாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மங்களூர் சுந்தரமூர்த்தி, கம்மாபுரம் நல்லதம்பி பங்கேற்று பேசினர். திட்டக்குடி பகுதியைச் சேர்ந்த உணவகம், அரிசி ஆலைகள், சூப்பர் மார்க்கெட், மருந்து கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளின் உரிமையாளர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.

Categories: Cuddalore, DISTRICT-NEWS
%d bloggers like this: