Home > Dharmapuri, DISTRICT-NEWS > பேக்கரி, ஓட்டல் நடத்த முறையான லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும் : விழிப்புணர்வு கூட்டத்தில் அறிவுறுத்தல்

பேக்கரி, ஓட்டல் நடத்த முறையான லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும் : விழிப்புணர்வு கூட்டத்தில் அறிவுறுத்தல்

7,October, 2016

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் பேக்கரி, ஓட்டல் நடத்த முறையான லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டுமென விழிப்புணர்வு கூட்டத்தில் அதிகாரி அறிவுறுத்தினார். தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில், பேக்கரி மற்றும் ஓட்டல் உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நேற்று தர்மபுரியில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் பிருந்தா தலைமை வகித்து ேபசியதாவது:
பாதுகாப்பான தரமான உணவுகளையே நுகர்வோருக்கு வழங்க வேண்டும். இதற்கு தரமான தளவாட உணவு பொருட்களை நீங்கள் வாங்க வேண்டும். சமயலுக்கு பயன்படுத்தும் எண்ணெயை மறுசுழற்சி செய்ய கூடாது. கையுறை, தலைக்கு உறை, சீருடை அணிந்தே உணவு தயாரிக்கவோ, பரிமாறவோ வேண்டும்.
உணவை அதிகமாக சூடுபடுத்தக் கூடாது. உணவுகளுக்கு செயற்கை சாயங்களையும் பயன்படுத்த கூடாது. ேபக்கரி மற்றும் ஓட்டல் நடத்த அனைவரும் முறையான லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும்.  இவ்வாறு அவர் ேபசினார். கூட்டத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கோபிநாத், நாகராஜ், சேகர், நந்தகோபால், குமணன், கந்தசாமி மற்றும் ஓட்டல், பேக்கரி உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Categories: Dharmapuri, DISTRICT-NEWS
%d bloggers like this: