Home > NEWS > செயற்கை முட்டை தமிழகத்தில் தயாரானதா…

செயற்கை முட்டை தமிழகத்தில் தயாரானதா…

13,October, 2016

திருவனந்தபுரம்:

கேரளாவில் சீனாவின் செயற்கை முட்டைகள் விற்கப்படுவது பற்றி விசாரணை நடத்த சுகாதார அமைச்சர் சைலஜா நேற்று உத்தரவிட்டார்.

கேரளாவில் சில பகுதிகளில் செயற்கை முட்டைகள் விற்கப்படுவதாக செய்திகள் வெளி வந்துள்ளன.  இதுபற்றி சுகாதார அமைச்சர் சைலஜாவிடம் கேட்டதற்கு, செயற்கை முட்டை பற்றி  அதிகாரப்பூர்வ தகவலோ அல்லது எழுத்துப்பூர்வமான புகாரோ  எதுவும் வரவில்லை.  பத்திரிகை செய்திகள் அடிப்படையில் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். அப்படி செயற்கை முட்டை என்று இருக்கிறதா… அவை கேரளாவுக்க வந்துள்ளதா என்று உணவு பாதுகாப்பு ஆணையரிடம் விசாரிக்கும்படி கூறியிருக்கிறேன்.  அப்படி வந்திருந்தால் அவை ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி பரிசோதிக்கப்படும் என்று பதில் அளித்தார்.

தமிழகத்தை ஒட்டி உள்ள இடுக்கி மாவட்டத்தில் செயற்கை முட்டை கிடைப்பதாகவும் அது தமிழ்நாட்டில் இருந்து வந்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இது பற்றி இடுக்கி மாவட்ட மருத்துவ அதிகாரி ரேகா விசாரணை நடத்தப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.  வழக்கமான முட்டை போல அல்லாமல் செயற்கை முட்டைகள் பிரவுன் நிறத்தில் இருக்குமாம்இதில் பூச்சிகள் அண்டாது. பச்சையாக இருந்தாலும் சமைக்கப்பட்டிருந்தாலும் இந்த முட்டைகள் கெடாது என்று உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன. ஆனால் ரசாயன பொருட்களை கொண்டே இந்த முட்டைதயாரிக்கப்படுவதாகவும், மேலே உள்ள வெள்ளை நிற ஓடு மெழுகினால் தயாரிக்கப்பட்டது என்றும்  இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் கூறப்படுகிறது.

Categories: NEWS
%d bloggers like this: