Home > DISTRICT-NEWS, Erode > ரூ.28 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்

ரூ.28 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்

13,October, 2016

ஈரோடு: ஈரோட்டில், 28 லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்களான ஹான்ஸ், சாந்தி பாக்கு பாக்கெட்களை, போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு மாநகரில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குறிப்பாக ஹான்ஸ், சாந்தி பாக்கு பாக்கெட்கள் சரளமாக கிடைக்கிறது. கூடுதல் விலைக்கு ஹான்ஸ் விற்கப்படுகிறது. ஆனால் போலீசார், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை. இந்நிலையில், நேற்று காலை ஈரோடு எஸ்.பி சிவக்குமாரின் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு ரகசிய தகவல் சென்றது. அதன்படி, ஈரோடு டவுன் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் போலீசார் ஈரோடு கிழக்கு கொங்காலம்மன் கோவில் வீதிக்கு சென்றனர். அங்குள்ள முருகன் ஸ்டோரில் ரெய்டு நடத்தப்பட்டது. அப்போது, 59 மூட்டைகளில் ஹான்ஸ், சாந்தி பாக்கு பாக்கெட்கள் இருப்பது தெரியவந்தது. மொத்தம், ஒரு லட்சத்து 63 ஆயிரம் பாக்கெட்கள் இருந்தது. வெளியே சில்லரை விற்பனைக்காக, 4,500 பாக்கெட் ஹான்ஸ், சாந்தி பாக்குகள் இருந்தது. இவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், காவிரி ஸ்டோரில் ரெய்டு நடத்தப்பட்டது. அங்கு, 20 மூட்டைகள், 15 பெட்டிகளில் ஹான்ஸ் பாக்கெட்கள் இருந்தது. மொத்தம், ஒரு லட்சத்து 13 ஆயிரம் பாக்கெட்களில் ஹான்ஸ், சாந்தி பாக்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மொத்த மதிப்பு, 28 லட்சத்து 20 ஆயிரம். ஹான்ஸ், சாந்தி பாக்கெட்கள் ஈரோடு டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு செல்லப்பட்டன. ஈரோடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை அலுவலர்களிடம், பறிமுதல் செய்யப்பட்ட ஹான்ஸ், சாந்தி பாக்கு பாக்கெட்கள் ஒப்படைக்கப்பட்டன.

Categories: DISTRICT-NEWS, Erode
%d bloggers like this: