Home > Dharmapuri, DISTRICT-NEWS > ஓட்டல் நடத்துபவர்கள் சான்றிதழ் பெற வேண்டும் : உணவு பாதுகாப்பு அதிகாரி தகவல்

ஓட்டல் நடத்துபவர்கள் சான்றிதழ் பெற வேண்டும் : உணவு பாதுகாப்பு அதிகாரி தகவல்

15,October, 2016

பாப்பாரப்பட்டி: ஓட்டல் நடத்துபவர்கள் முறையான சான்றிதழ் பெற ேவண்டும் என மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி தெரிவித்துள்ளார். தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் அனைத்து உணவு வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு முகாம் பாப்பாரப்பட்டியில் நடந்தது. மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் நியமன அலுவலர் பிருந்தா தலைமை வகித்து ேபசியது:
ஓட்டல்கள் நடத்துபவர்கள் பொதுமக்களுக்கு தரமான உணவு வழங்க ேவண்டும். காலாவதியான உணவு பொருட்களை வைத்திருப்பதை தவிர்க்க ேவண்டும். ஓட்டல் நடத்துபவர்கள், அதற்கான முறையான சான்றிதழ் பெற்றிருக்க ேவண்டும். விற்பனை செய்யப்படும் பொருட்களை திறந்த நிலையில் வைத்திருக்க கூடாது. ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக்கூடாது.
காலாவதியான குளிர்பானம் மற்றும் குடிநீரை விற்பனை செய்யக்கூடாது. பொருட்கள் தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதியாகும் தேதி குறிப்பிடாத பொருட்கள் விற்பனை செய்வதை தவிர்க்க ேவண்டும். இவ்வாறு அவர் ேபசினார்.
இந்நிகழ்ச்சியில் பாப்பாரப்பட்டி செயல் அலுவலர் ஜெலேந்திரன், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகோபால், சேகர், நாகராஜன், கந்தசாமி, குமணன், கோபிநாத் மற்றும் அனைத்து வர்த்தக சங்க நிர்வாகிகள் தலைவர் மணி, செயலாளர் தாமோதரன், மளிகை கடை சங்க தலைவர் கேசவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Categories: Dharmapuri, DISTRICT-NEWS
%d bloggers like this: