Home > DISTRICT-NEWS, Nagapattinam > நாகையில் மருந்து கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு

நாகையில் மருந்து கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு

15,October, 2016

நாகை: நாகை நீலா மேலவீதியில் உள்ள மருந்து விற்பனை கடைகளில் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் நேற்று ஆய்வு நடத்தினார். ஆய்வின்போது, காலாவதியான மற்றும் தயாரிப்பு விவரம் இல்லாமல் அடைக்கப்பட்ட உணவு வகைகளான சத்து பானங்கள், பவுடர்கள், மாத்திரைகள், சிரப்புகள், உணவுக்கு மாற்றாக தரப்படும் சத்து பானங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளனவா என்பதை விற்பனை செய்யும் இடத்திலும், இருப்பு வைக்கும் இடத்திலும் ஆய்வு செய்தனர்.
உணவு தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரும் உணவு பாதுகாப்பு துறையிடம் உரிமம், பதிவுச்சான்று பெறுவது கட்டாயமாகும். இதற்கான காலக்கெடு கடந்த ஆகஸ்ட் 4ம் தேதியே முடிவடைந்து விட்டதால் நாகை நகராட்சிக்குட்பட்ட நாகூர் மற்றும் நாகையில் உள்ள ஆங்கில மற்றும் இந்திய முறை மருந்துக்கடைகளில் உணவு பொருட்களையும் சேர்த்து விற்பனை செய்யும் அனைத்து மருந்து கடைகள், மருத்துவரின் தனிப்பட்ட மருத்துவமனைகளில், சிகிச்சை மையங்களில் விற்பனை செய்பவர்களும் உடனடியாக உணவு பாதுகாப்புத்துறை உரிமம் பெற வேண்டும். என கடை உரிமையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டது.

%d bloggers like this: