Home > DISTRICT-NEWS, Sivaganga > திருப்பத்தூர் கடைகளில் காலாவதியான உணவுப் பொருள்கள் பறிமுதல்

திருப்பத்தூர் கடைகளில் காலாவதியான உணவுப் பொருள்கள் பறிமுதல்

18,October, 2016

திருப்பத்தூர்,
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் கடைவீதிகளில் காலாவதியான உணவு பொருள்கள் மற்றும் புகையிலை விற்பனை குறித்து செவ்வாய்கிழமையன்று அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

திருப்பத்தூர் பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் காலாவதியான பொருள்கள் விற்பனை செய்யப்படுவதா வந்த புகாரையடுத்து செவ்வாய்கிழமையன்று உணவு பாதுகாப்பு அலுவலர் சுரேஷ் தலைமையில் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் தங்கதுரை உள்ளிட்ட அலுவலர்கள் கடைவீதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
பேருந்து நிலையம், பெரியகடைவீதீ, கரைக்குடிரோடு, மதுரை ரோடு, ஆகிய இடங்களில் உள்ள பெட்டிக்கடை, டீக்கடை, ஹோட்டல்கள் மற்றும் வணிக வளாககங்களில் உணவுப் பொருள்கள் காலாவதி குறித்தும் மற்றும் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் ஹோட்டல்களில் உணவு தயாரிப்பாளரின் உடைகள் மற்றும் கைசுத்தம் குறித்தும் ஆலோசனை வழங்கபட்டது. ஒருசில இடங்களில் தேதியில்லா குளிர்பானங்கள் மற்றும் பாக்கெட் திண்பண்டங்கள் கைப்பற்றப்பட்டு வியாபாரிகளுக்கு எச்சரிக்கப்பட்டது.
மேலும் இந்த ஆய்வில் பேரூராட்சி அலுவலக ஊழியரகள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

Categories: DISTRICT-NEWS, Sivaganga
  1. No comments yet.
  1. 19,October, 2016 at 8:31 am
Comments are closed.
%d bloggers like this: