Home > NEWS > சீனாவின் செயற்கை முட்டைகள் கேரளாவில் விற்கப்படுவதாக வதந்தி

சீனாவின் செயற்கை முட்டைகள் கேரளாவில் விற்கப்படுவதாக வதந்தி

19,October, 2016

கேரளாவில் நச்சுதன்மை நிறைந்த சீனாவின் செயற்கை முட்டைகள் விற்பனைக்கு வந்திருப்பதாக பரவிய வதந்தியால் அம்மாநில மக்கள் மிகவும் பீதியடைந்துள்ளனர். இதனால் முட்டை விற்பனை கடுமையாக சரிந்துள்ளது.

சில மலையாள ஊடகங் களில் சீனாவில் இருந்து செயற்கை யான முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. இதைத் தொடர்ந்து சமூக இணையத்தளங்களிலும் இது தொடர்பான எச்சரிக்கைகள் உடனடியாக பரிமாறி கொள்ளப் பட்டன. இதனால் இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து கேரளா முழுவதும் உள்ள பல்வேறு ‘டிவி’ சேனல்களும் களத்தில் இறங்கி முட்டை நுகர்வோர்களிடம் பேட்டி எடுத்து ஒளிபரப்பின.

போதாகுறைக்கு பாஜக தொண்டர்கள் சிலரும் மேடையேறி முட்டையின் மஞ்சள் கருவை சுற்றி பிளாஸ்டிக் நூலிழை ஓட்டி யிருப்பதாக அதை உடைத்து காண் பித்து பொதுமக்களை மேலும் பீதியடைய வைத்தனர். இதனால் கேரளாவில் முட்டை வாங்கி சாப்பிடவே பொதுமக்கள் மிகவும் தயக்கம் காட்டினர்.

இந்தச் சூழலில் கேரள சாஸ்திர சாஹித்ய பரிஷத் அமைப்பின் ஆன்லைன் பத்திரிகையில் செயற்கையாக முட்டைகளை உரு வாக்க முடியாது என்று கட்டுரை வெளியிடப்பட்டது. ஐ.நா.வின் சுற்றுச்சூழல் திட்டத்தில் பேரிடர் தடுப்பு தலைவராக பணியாற்றும் டாக்டர் முரளி தும்மருகுடியும் செயற்கை முட்டைகள் என்பது கட்டுக்கதை, அதை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என தனது பேஸ்புக் பதிவில் கேட்டுக் கொண்டார்.

கேரள சாஸ்திர சாஹித்ய பரிஷத் அமைப்பின் தலைவரான டாக்டர் கே.பி.அரவிந்தனும் செயற்கை முட்டைகள் குறித்து வதந்தி பரப்பிய ஊடகங்களைச் சாடினார்.

மாநில உணவு பாதுகாப்பு அதிகாரிகளும், கேரளாவில் உள்ள முட்டைகளை பரிசோதித்து, அவை அனைத்தும் தமிழகத்தின் நாமக்கல்லில் இருந்து வந்த உண்மையான முட்டைகள் என உறுதிபடுத்தினர்.

எனினும் இதற்கு கூடுதல் ஆதாரம் கேட்டு கேரள மாநில பாஜக பிடிவாதம் பிடித்து வருகிறது. இதுகுறித்து பாஜக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர் பி.சிவசங்கரன் கூறும்போது, ‘‘முட்டைகளின் மாதிரிகளைப் பிராந்திய ஆய்வு கூடத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம். மேலும் சில முட்டைகளை மைசூருவில் உள்ள மத்திய உணவு தொழில்நுட்ப ஆய்வு மையத்துக்கும் அனுப்பி வைக்கவுள்ளோம்’’ என்றார்.

தமிழகத்துக்கு பாதிப்பில்லை

தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.நல்லதம்பி நாமக்கல்லில் கூறியதாவது:

கேரளாவில் சீன செயற்கை முட்டை விற்பனையாவதாக வதந்தி பரவி வருகிறது. உள்நாட்டில் முட்டை உற்பத்தி அதிகமாக இருக்கும்போது, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதற்கு அவசியமே இல்லை. தவிர இந்தியாவில் முட்டை இறக்குமதி செய்வது கிடையாது. செயற்கையாக முட்டை சீனாவில் தயாரிப்பதாகத் தெரிவிக்கின்றனர். அவ்வாறு தயாரித்தாலும் அந்த முட்டையை இறக்குமதி செய்ய முடியாது. தமிழகத்தில் இருந்து செல்லும் முட்டையை தடுத்து நிறுத்தினால், கேரளாவில் உள்ளவர்கள் முட்டைக்கு என்ன செய்வார்கள். சீன செயற்கை முட்டை என்பது கேரள உள்ளூர் வியாபாரிகள் பரப்பிய வதந்தியாகும். தமிழகத்திலிருந்து தினமும் கேரளாவிற்கு 70 லட்சம் முட்டைகள் அனுப்பப்படுகின்றன. அதில் எந்த பாதிப்பும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Categories: NEWS
%d bloggers like this: