Home > DISTRICT-NEWS, Sivaganga > சர்பத்தில் கலப்படம் இருவருக்கு சிறை

சர்பத்தில் கலப்படம் இருவருக்கு சிறை

21,October, 2016

சிவகங்கை, சருகனி பஸ் நிலையம் அருகில் மளிகைக்கடை நடத்தி வருபவர் ஆரோக்கியம்,60. தேவகோட்டை ரஸ்தா கைலாசநாதர் கோயில் தெரு சோமசுந்தரம்,36. இவர்,சர்பத் தயாரித்து, ஆரோக்கியத்தின் கடைக்கு சப்ளை செய்துள்ளார்.
அந்த சர்பத்தை குடித்த பலருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக வந்த புகாரை தொடர்ந்து, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சர்பத் பாட்டிலை பரிசோதனைக்கு அனுப்பினர். சர்பத்தில் இனிப்பு அதிகமாக இருப்பதற்காக,சீனிக்கு பதில் ‘ஜாக்ரீம்’ கலந்து இருப்பது தெரிய வந்தது.
உணவு பாதுகாப்பு அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து சோமசுந்தரம், ஆரோக்கியத்தை கைது செய்து தேவகோட்டை ஜே.எம்., கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.இவ்வழக்கில் கைதான இருவருக்கும் தலா 6 மாதம் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து கடந்த 2014 ல் தீர்ப்பு கூறப்பட்டது.
இதை எதிர்த்து இருவரும் சிவகங்கை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். வழக்கை மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி பி.ஜெயராஜ் விசாரித்து, ஆரோக்கியத்திற்கும், சோமசுந்தரத்திற்கும் சிறை தண்டனையை தலா 2 மாதங்களாக குறைத்தும்,ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.

Categories: DISTRICT-NEWS, Sivaganga
%d bloggers like this: