Home > DISTRICT-NEWS, Salem > உரிமம் இன்றி இனிப்புகள் தயாரிப்பு: உணவு பாதுகாப்பு துறை நோட்டீஸ்

உரிமம் இன்றி இனிப்புகள் தயாரிப்பு: உணவு பாதுகாப்பு துறை நோட்டீஸ்

27,October, 2016

மேட்டூர்: உரிமம் இன்றி, இனிப்பு தயாரித்தவருக்கு, நோட்டீஸ் கொடுத்த நிலையில், சுகாதாரமற்ற இனிப்பு தயாரித்த, இருவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
உணவு பாதுகாப்பு துறை, சேலம் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அனுராதா மற்றும் அலுவலர்கள், நேற்று முன்தினம் இரவு, சமத்துவபுரம், குஞ்சாண்டியூர், மேட்டூர் பகுதிகளில், தீபாவளி இனிப்பு தயாரிக்கும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, குஞ்சாண்டியூரில் சம்பத் என்பவர், உணவு பாதுகாப்பு துறை உரிமம் பெறாமல், இனிப்பு தயாரித்து விற்றது தெரிந்தது. அவருக்கு, உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் அனுராதா, நோட்டீஸ் கொடுத்தார். மேட்டூரில், உணவு பாதுகாப்பு துறை உரிமம் பெற்று, திருமண மண்டபங்களில், லட்சுமணன் மற்றும் ராஜூ குழுவை சேர்ந்த ஊழியர்கள், சுகாதாரமற்ற முறையில், இனிப்பு தயாரிக்கும் பணி மேற்கொண்டது தெரிந்தது. இதே நிலை தொடர்ந்தால், உரிமம் ரத்து செய்யப்படும் என, உணவு பாதுகாப்பு துறை சார்பில், இரு தயாரிப்பாளர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Categories: DISTRICT-NEWS, Salem
%d bloggers like this: