Home > DISTRICT-NEWS, Erode > தீபாவளி பலகாரங்கள் தயாரிப்பு: உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு

தீபாவளி பலகாரங்கள் தயாரிப்பு: உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு

27,October, 2016

பள்ளிபாளையம்: தீபாவளிக்கு தற்காலிகமாக மண்டபம், பிற இடங்களில் சுவீட், காரம் தயாரிக்கும் கூடங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள், ஆய்வு செய்தனர். பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதியில் மண்டபம், கடைகள், குடோன் உள்பட பிற இடங்களில், தீபாவளி சமயத்தில் சுவீட், காரம் தயாரித்து விற்பனை செய்வர். அதில், செயற்கை நிற பவுடர்களையும், கலப்படம் செய்த, மூலப்பொருட்களையும் பயன்படுத்துவர். இதை தடுக்கும் வகையில், பலகாரம் தயாரிக்கும் கூடங்களில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ராஜா, மனோகரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து, உணவு பாதுகாப்புதுறை அதிகாரி ராஜா கூறியதாவது: பள்ளிபாளையம் பகுதியில் தீபாவளிக்கு இனிப்பு, காரம் தயாரிக்கும், ஏழு கூடங்களில் ஆய்வு செய்தோம். தயாரிப்பு பொருட்களில் குறிப்பிட்ட அளவுகளில் மட்டும் செயற்கை நிற பவுடர் உள்ளதா, எண்ணெய், மைதா போன்ற பொருட்களில் அக்மார்க் முத்திரை உள்ளதா என பார்த்தோம். தொழிலாளர்கள், தலையில் கவரும், கையில் உறையும் அணிந்து இருக்க வேண்டும். முறையான அனுமதி பெற்று உள்ளார்களா எனவும் ஆய்வு செய்தோம்.இனிப்பு, காரம் குறித்து பொதுமக்களிடம் இருந்து புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Categories: DISTRICT-NEWS, Erode
%d bloggers like this: