Home > DISTRICT-NEWS, Tiruvannamalai > ஆரணி பகுதி கடைகளில் திடீர் ஆய்வில் தரமற்ற உணவுபொருட்கள் பறிமுதல் : உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அதிரடி

ஆரணி பகுதி கடைகளில் திடீர் ஆய்வில் தரமற்ற உணவுபொருட்கள் பறிமுதல் : உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அதிரடி

10,November, 2016

திருவண்ணாமலை: ஆரணி கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நேற்று திடீர் ஆய்வு செய்து தரமற்ற உணவு பொருட்களை பறிமுதல் செய்தனர். ஆரணியில் திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் எம்.பி. ராஜா தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பாபு, (ஆரணி நகராட்சி), ரவி (ஆரணி வட்டாரம்), சீனிவாசன் (திருவத்திபுரம்), ரவிச்சந்திரன்(போளூர்), சுப்பிரமணி (திருவண்ணாமலை), அன்பு (சேத்பட்டு) உள்ளிட்ட குழுவினர்கள் ஆரணி நகரில் உள்ள உணவகங்கள் மற்றும் கடைகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை, பல்வேறு உணவு பொருட்கள் விற்பனை உள்ளிட்ட மொத்த விற்பனை கடைகள், சில்லரை விற்பனை கடைகள் என 50க்கும் மேற்பட்ட கடைகளை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் போது தரமற்ற உணவு பொருட்களும், தேதி காலவாதியான உணவு பொருட்கள், தேதி குறிப்பிடாமல் இருந்த உணவு பொருட்கள், உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படுத்தும் தரமற்ற உணவு பொருட்கள் கேன்சர் உண்டாக்கும் அதிகப்படியான சாயம் உணவு பொருட்கள் ஆய்வின் போது இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட உணவு மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். ஆய்வு அறிக்கைக்கு பிறகு சம்மந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட ₹30 ஆயிரம் மதிப்பிலான தரமற்ற உணவு பொருட்களை அழித்தனர்.

%d bloggers like this: