Home > NEWS > சேலம்-நாமக்கல்லில் உப்பு தட்டுப்பாடு ‘வதந்தி’ கிலோ ரூ.400-க்கு விற்பனை

சேலம்-நாமக்கல்லில் உப்பு தட்டுப்பாடு ‘வதந்தி’ கிலோ ரூ.400-க்கு விற்பனை

சேலம்,
உத்தரப்பிரதேசத்தில் உப்பு தட்டுப்பாடு என்ற தகவல் 2 நாட்களுக்கு முன்பு பரவியது. இதைய டுத்து  ஏராளமான மக் கள் ஒரே நேரத்தில் கடை களில் திரண்டதால்   கூட் டம் அலை மோதியது.
இந்த நிலையில் சேலத்தி லும்   உப்பு தட்டுப்பாடு ஏற் படும் என்ற தகவல் நேற்று காலை முதலே  காட்டுத் தீ போல பரவியதால் கடை களில் உப்பு வாங்க பொது மக்கள் திரண்டனர்.
செவ்வாய்ப்பேட்டை கடை வீதியில் உள்ள உப்பு மண்டிகளில் ஏராளமான பொதுமக்கள்  குவிந்தனர்.   உப்பு மூட்டைகளை போட்டி போட்டு வாங்கி சென்றனர்.
பல மடங்கு
பொதுமக்கள் உப்பு வாங்க கூட்டம், கூட்டமாக வருவதை  பார்த்த வியாபாரிகள் உப்பு விலையை  பல மடங்கு  உயர்த்தி  விற்பனை செய் தனர்.
25  கிலோ எடைகொண்ட  பொடி  உப்பு மூட்டை வழக்க மாக  ரூ180 முதல் 200 வரை விற்கப்படும். நேற்று இந்த விலை  திடீரென உயர்ந்து  300 வரை விற்கப்பட்டது. 160  ரூபாய்க்கு   விற்கப்படும் கல் உப்பு நேற்று  200 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
விலையை பொருட்படுத் தாத  பொதுமக்கள் மூட்டை, மூட்டையாக உப்புகளை வாங்கி சென்றதால் உப்பு  மண்டிகளில் உள்ள அனைத்து உப்பு  மூடைகளும் சில மணி நேரங்களில்  விற்று தீர்ந்தன. ஒமலூர் வட்டார  பகுதி களில்  தட்டுப்பாடு ஏற்படும் என்ற தகவல்   அங்கும்  பரவியதால் பொதுமக்கள் போட்டி போட்டு உப்பை வாங்கி சென்றனர்.
ஒமலூர், தொளசம்பட்டி, காடையாம்பட்டி, தாரமங் கலம்  பகுதிகளில் ஒரு கிலோ உப்பு ரூ.300 முதல் 400 வரை விற்பனையானது.  ஆனாலும் பொதுமக்கள்  நீண்ட வரிசையில் நின்று உப்பு வாங்கி சென்றதால்   கடைகளில்   இருந்த     உப்பு மூட்டைகள் காலியானது.சங்ககிரி, மேச்சேரி, எடப் பாடி, தம்மம்பட்டி பகுதிகளிலும் உப்பு மண்டி களில் பொதுமக்களும், வியாபாரிகளும் மூட்டை, மூட்டையாக  உப்புகளை வாங்கி சென்றனர்.
மல்லிகுந்தம், புதுச்சாம் பள்ளி, குஞ்சாண்டியூர், ஜலகண்டபுரம்  பகுதிகளில் பொது மக்கள் நீண்ட வரிசையில் நின்று உப்பு வாங்கியதால் 90 ரூபாய்க்கு விற்ற ஒரு மூட்டை உப்பு 400 வரை விற்பனையானது.  
ஜலகண்டாபுரத்தில் உப்பை பதுக்கி வைத்திருப்ப தாக கடைகாரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். நேரம் செல்ல செல்ல மல்லி குந்தத்தில் ஒரு கிலோ உப்பு ரூ.150 வரையும், மேச்சேரியில் 130 வரையும்    விற்பனையானது.
சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி  அனு ராதா சேலம் செவ்வாய் பேட்டை, பால் மார்க்கெட், சின்ன கடை வீதி, மெயின் பஜார் உள்பட பல பகுதி களில் உள்ள உப்பு மண்டி களுக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது  செவ் வாய்ப்பேட்டை  பால் மார்க் கெட் பகுதியில்  உப்பை  கூடு தல்  விலைக்கு விற்ற  3 கடை களை மூட உத்தரவிட்டார்.
இது குறித்து அவர் கூறு கையில்,  செவ்வாய்பேட்டை பால்மார்க்கெட் பகுதியில் ஒரு கிலோ உப்பு ரூ. 60 வரை விற்கப்பட்டதால் 3 கடைகளை மூட உத்தர விடப் பட்டுள்ளது. அந்த கடைகளில் இன்றும்  அதிகாரிகள் ஆய்வு செய்கிறார்கள். கூடுதல் விலைக்கு உப்பு விற்பனை செய்தாலோ   உப்பை பதுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று  கூறினார்.
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று நாமக்கல், ராசிபுரம், பரமத்திவேலூர், குமாரபாளையம் பகுதிகளில் உப்பு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால்  உப்பு கிடைக்காது, அதன் விலை தாறுமாறாக உயரும் என புரளி கிளம்பியது.
இதையடுத்து பொதுமக்கள் மளிகை கடைகளுக்கு  படையெடுத்து உப்பு பாக்கெட்டுகளை இரண்டு மற்றும்  மூன்று மடங்கு விலை அதிகம் கொடுத்து வாங்கி சென்றனர்.
சாதாரண நாட்களில் கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்ட உப்பை ரூ.30 முதல் ரூ.50 வரை கடைக்காரர்கள் விற்பனை செய்தனர். உப்பு விலை இன்னும் அதிகரிக்கும் என்ற புரளியால் பொதுமக்கள் சிப்பம், சிப்பமாக வாங்கி செல்வதை காண முடிந்தது.
குமாரபாளையம் பகுதியிலும் உப்பு விலை கிலோ ரூ.100 முதல் ரூ.200 வரை எகிறும் என்று சிலர் மக்கள் மத்தியில் புரளியை கிளப்பி விட்டனர். இதை அறிந்த பொதுமக்களிடம் பீதி ஏற்பட்டது. இதையடுத்து மளிகை கடைகளுக்கு சென்ற பொதுமக்கள் இரண்டு மடங்கு, மூன்று மடங்கு விலை கொடுத்து உப்பை வாங்கினர்.
பரமத்திவேலூரிலும் வதந்தி பரவியதால் பஸ்நிலையம் அருகே உள்ள மளிகைகடையில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து உப்பு பாக்கெட்டுகளை வாங்கி செல்வதை காண முடிந்தது.
ராசிபுரம், வெண்ணந்தூர், குருசாமி பாளையம் பகுதியிலும் நேற்று இரவு உப்பு தொடர்பாக எழுந்த புரளி காரணமாக பொதுமக்கள் மளிகை கடைகளில் உப்பு வாங்க அலைமோதினர்.
இது குறித்து அதிகாரி களிடம் கேட்டபோது, நாமக் கல் மாவட்டத்தில் எங்கும் உப்பு தட்டுப்பாடு ஏற்படவில்லை. எனவே பொதுமக்கள் புரளியை நம்பி அதிக விலைக்கு உப்பு மூட்டைகளை வாங்கி வைக்க வேண்டாம். இதுபோன்ற புரளியை கிளப்பி விடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற னர்.

Categories: NEWS
  1. No comments yet.
  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: