Home > DISTRICT-NEWS, Kanniyakumari > திங்கள்சந்தையில் பரபரப்பு : காலாவதி குளிர்பானம் குடித்த கல்லூரி மாணவர்கள் மயக்கம்

திங்கள்சந்தையில் பரபரப்பு : காலாவதி குளிர்பானம் குடித்த கல்லூரி மாணவர்கள் மயக்கம்

17,November, 2016

திங்கள்சந்தை: குமரி மாவட்டத்தில் சில வர்த்தக நிறுவனங்களில் காலாவதியான உணவு பொருட்கள் சர்வ சாதாரணமாக விற்பனையாகி வருகிறது. குறிப்பாக திங்கள்சந்தை, இரணியல் பகுதிகளில் உள்ள சில ஹோட்டல்கள், பேக்கரிகள் உள்ளிட்ட கடைகளில் காலாவதியான மோர், தயிர், பால் போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. திங்கள்சந்தை மார்க்கெட் பகுதியில் உள்ள சில பழக்கடைகளில் துர்நாற்றம் வீசும் பழ வகைகள் விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது. 2 அல்லது 3 நாட்களுக்கு முன் வெட்டப்பட்ட மாட்டு இறைச்சியும் விற்பனை செய்யப்படுகிறது.
திங்கள்சந்தையில் உள்ள ஒரு கடையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குளிர்பானம் குடித்த 2 கல்லூரி மாணவர்கள் அங்கேயே மயங்கி விழுந்தனர். விசாரணையில் மாணவர்கள் குடித்த குளிர்பானம் காலாவதியானது என தெரியவந்தது. அக்கம் பக்கத்தினர் மாணவர்களுக்கு முதலுதவி அளித்தனர். தொடர்ந்து மாணவர்கள் மயக்கம் தெளிந்து எழுந்து சென்றனர். இது போன்ற சம்பவங்கள் குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. ஆகவே இது குறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

%d bloggers like this: