Home > DISTRICT-NEWS, Ramanathapuram > தரமில்லாத 40 தண்ணீர் பாக்கெட் மூட்டைகள் பறிமுதல்

தரமில்லாத 40 தண்ணீர் பாக்கெட் மூட்டைகள் பறிமுதல்

25,November, 2016

திருவாடானை அருகே வியாழக்கிழமை பாதுகாப்பின்றி கொண்டு வரப்பட்டதாக கூறி,40 தண்ணீர் பாக்கெட் மூட்டைகளை உணவுப்பொருள் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
  திருவாடானை அருகே உள்ள சி.கே.மங்கலத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகதீஸ் சந்திரபோஸ், திருவாடானை உணவு பாதுகாப்பு அதிகாரி கர்ணன், ராமநாதபுரம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் ஜான் பீட்டர் ஆகியோர் பரிசோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, புதுகோட்டையில் இருந்து வந்த சரக்கு வாகனத்தில் தண்ணீர் பாக்கட் மூட்டைகள் இருந்தன. அவை பாதுகாப்பின்றி கொண்டுவரப்பட்டதாக கூறி ரூ.27 ஆயிரம் மதிப்பிலான 1 லிட்டர், 2 லிட்டர் பாட்டில்கள், 40 தண்ணீர் பாக்கட் மூட்டைகள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து மாவட்ட உணவு நியமண அலுவலர் ஜெகதீஸ் சந்திரபோஸ் கூறுகையில்,தண்ணீர் பாட்டில்களில் ஐஎஸ்ஐ முத்திரை இருந்தாலும் அவற்றை வெயில் படாதவாறு கொண்டுவர வேண்டும்.
பாட்டில்கள் மீது வெயில் பட்டால் உணவு ஒவ்வாமை ஏற்படும்.
  தண்ணீர் மாதிரிகள் மதுரை உணவு பரிசோதனை மையத்திற்கு அனுப்பிவைக்கபட்டுள்ளது.
  மேலும் சரக்கு வாகனம் ஓட்டுநரிடம் விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

%d bloggers like this: