Home > NEWS > ஊட்டச்சத்து உணவுகளுக்கு தரக் கட்டுப்பாடு அமல்

ஊட்டச்சத்து உணவுகளுக்கு தரக் கட்டுப்பாடு அமல்

26,November, 2016

புதுடில்லி: ஊட்டச்சத்து, சிறப்பு மருத்துவ உணவுகள் உள்ளிட்ட தயாரிப்புகளுக்கான, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன.

உணவு பொருட்களின் தரத்தையும், மக்களின் ஆரோக்கியத்தையும் உறுதிப்படுத்தும் வகையில், பல்வேறு உணவுப் பொருட்களுக்கு, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனப்படும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் தரச் சான்றிதழ்களை அளித்து வருகிறது. சிறப்பு மருத்துவ உணவுகள், ஊட்டச்சத்து உணவுகள், உடல் எடை கூட்டுவதற்கான, குறைப்பதற்கான உணவுப் பொருட்களும், ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. இது, நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது.

இதையடுத்து, இந்த உணவுப் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், அடுத்த ஒரு ஆண்டுக்குள், தரச் சான்றிதழை பெறுவதுடன், விதிகளுக்கு உட்பட்டு பொருட்களை தயாரிக்க வேண்டும். 2018, ஜன., 1 முதல், இந்த உணவுப் பொருட்களுக்கான கட்டுப்பாடு முறையாக அமலுக்கு வருகிறது.

இந்த அறிவிப்பை, உணவுப் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் வரவேற்றுள்ளன. இந்த தரச் சான்றிதழ் மூலம், தம் பொருட்களுக்கான மதிப்பு, மேலும் அதிகரிக்கும் என, அவை நம்பிக்கை தெரிவித்துள்ளன.

Categories: NEWS
%d bloggers like this: