Home > DISTRICT-NEWS, Villupuram > காலாவதியான சாக்லெட்களை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்: மொத்த விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை

காலாவதியான சாக்லெட்களை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்: மொத்த விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை

 

தியாகதுருகம்,

தியாகதுருகம் அருகே காலாவதியான சாக்லெட்களை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து மொத்த விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.

வாந்தி,மயக்கம்

விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் அடுத்த கூத்தக்குடி கிராமத்தில் உள்ள ரெயில்வே கேட் அருகே வீசப்பட்ட காலாவதியான சாக்லெட்களை சாப்பிட்ட கூத்தக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை சேர்ந்த 250 மாணவ–மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக கூத்தக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் 50–க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பள்ளிகளுக்கு நேரில் சென்று, அங்கு பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். இது குறித்த தகவலின் பேரில் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் சண்முகநாதன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதனிடையே ஒரு சில மாணவர்களை தவிர பெரும்பாலான மாணவ–மாணவிகள் முழுமையாக குணமடைந்து வீட்டுக்கு சென்றனர். பின்னர் அவர்கள் நேற்று வழக்கம் போல் தங்களது பள்ளிகளுக்கு வந்தனர். அங்கு அவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டாக்டர்கள் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து சாலையில் வீசப்பட்ட தின்பண்டங்களை எடுத்து சாப்பிட்டால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் விளக்கி கூறினர்.

சோதனை

இதனிடையே காலாவதியான சாக்லெட்களை வீசிவிட்டு சென்றவர்கள் தொடர்பாக தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதை தொடர்ந்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பழனிச்சாமி, சரவணன், முருகன், ஜெயராஜ், சையத்இப்ராகீம் ஆகியோர் கொண்ட குழுவினர் தியாகதுருகம் பகுதியில் உள்ள மொத்த விற்பனை கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது தியாகதுருகத்தில் உள்ள ஒரு மொத்த விற்பனை கடையில் 50 கிலோ எடை கொண்ட காலாவதியான சாக்லெட்கள் மற்றும் பிஸ்கட்கள் இருப்பது தெரிந்தது. இதையடுத்து அந்த சாக்லெட்கள், பிஸ்கட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். தொடர்ந்து அதிகாரிகள், மொத்த விற்பனை கடை உரிமையாளரிடம், ரெயில்வே கேட் சாலையோரத்தில் வீசப்பட்ட சாக்லெட்கள் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ரெயில்வே கேட் அருகே வீசப்பட்ட காலாவதியான சாக்லெட்களுக்கும், அந்த மொத்த விற்பனை கடை உரிமையாளருக்கும் தொடர்பு இல்லை என்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து உரிமையாளரிடம் காலாவதியான சாக்லெட்கள் உள்ளிட்ட தின்பண்டங்களை விற்பனை செய்வதோ, அல்லது சாலையோரத்தில் வீசுவதோ கூடாது. இதை மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்தனர்.

Categories: DISTRICT-NEWS, Villupuram
  1. No comments yet.
  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: