Home > DISTRICT-NEWS, Virudhunagar > கோவில்பட்டி நகரில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் சோதனை

கோவில்பட்டி நகரில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் சோதனை

23,March, 2017

 

கோவில்பட்டி நகரில் உள்ள பழக்கடைகள், குளிர்பானங்கடைகள் மற்றும் பஸ்புட் உணவகங்களில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தங்கவிக்னேஷ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கோவில்பட்டி நகரில் உள்ள பழக்கடைகள், குளிர்பானகடைகள் மற்றும் பஸ்புட் உணவகங்களில் தீடீரென சோதனை நடத்தினர். பழக்கடைகளில் கர்பைட் கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் உள்ளதா ? என்றும், குளிர்பானகடைகளில் விற்கப்படும் பழரசம் உள்ளிட்ட குளிர்பானத்தில் கழிவு பழங்கள் மற்றும் கெமிக்கல் பவுடர்கள் கலக்கப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்தனர். மெயின் ரோட்டில் உள்ள ஒரு குளிர்பானக்கடையில் பழரசத்திற்கு வைக்கப்பட்டு இருந்த பப்பாளி பழத்தில் அதிக கெமிக்கல் இருப்பதை கண்டறித்து அவற்றை அழித்தனர். மேலும் நகரில் உள்ள துரித உணவு என்றழைக்கப்படும் பஸ்புட்கடைகளிலும் சோதனை நடத்தினர். அங்கு தயாரிக்கப்படும் உணவு பதர்த்தங்களின் தரம் குறித்து ஆய்வு நடத்தினர். இதன் பின்பு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தங்க விக்னேஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில் தற்போது வெயில் காலம் என்பதால் அதிகளவு குளிர்பானங்கள் விற்பனையாகும், அவை தரமுள்ளவை என்பது குறித்து சோதனை நடத்தப்பட்டது. ரசயான பொடிகள் வைத்து பழங்கள் பழுக்க வைப்பது, குளிர்பானங்களுடன் ரசாயன பொடிகள் கலந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், ஹோட்டல்களில் செய்திதாள்களில் உணவு பெட்டலங்கள் கொடுப்பதை தவிர்க வேண்டும், மேலும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்த்து இலைகளை பயன்படுத்த வேண்டும் என்றார். இந்த ஆய்வின் போது உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் முருகேசன்,மாரிச்சாமி,பொன்ராஜ், சிவபாலன், செல்லப்பாண்டி ஆகியோர் உடனிருந்தனர்.

%d bloggers like this: