Home > DISTRICT-NEWS, Villupuram > அங்கன்வாடி பணியாளர்களுக்கு விழிப்புணர்வுக் கூட்டம்

அங்கன்வாடி பணியாளர்களுக்கு விழிப்புணர்வுக் கூட்டம்

26,April, 2017

ஒலக்கூர் ஒன்றியத்தில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு மாவட்ட உணவுப் பாதுகாப்பு பிரிவு சார்பில் திங்கள்கிழமை விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை (உணவு பாதுகாப்புப் பிரிவு) சார்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் கு.வரலட்சுமி தலைமை வகித்துப் பேசினார்.
நிகழ்ச்சியில் ஒலக்கூர் ஒன்றியத்தில் இயங்கி வரும் அங்கன்வாடிகளின் பணியாளர்கள் 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஒலக்கூர் வட்டார குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் விஜயலட்சுமி வரவேற்றார்.
அவர்களுக்கு உணவுப் பாதுகாப்பு குறித்து வினாக்கள் கேட்கப்பட்டு அதில் சிறப்பாக பதில் அளித்தவர்களுக்கு பரிசுகளை மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் உணவுப் பாதுகாப்பு அலுவலர் பாரித பன்னீர்செல்வம், கு.மோகன், சந்திரசேகரன், கதிரவன், ஜெயராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திண்டிவனம் நகராட்சி குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் முரளி நன்றி கூறினார்.

Categories: DISTRICT-NEWS, Villupuram
%d bloggers like this: