Home > DISTRICT-NEWS, Namakkal > கலப்பட ஆலைகளின் உரிமம் ரத்து செய்ய கலெக்டரிடம் மனு

கலப்பட ஆலைகளின் உரிமம் ரத்து செய்ய கலெக்டரிடம் மனு

28,April, 2017

நாமக்கல்: தமிழக ஸ்டார்ச், சேகோ உற்பத்தியாளர்கள் நலச்சங்க தலைவர் துரைசாமி மற்றும் சங்க நிர்வாகிகள், மாவட்ட கலெக்டர் ஆசியா மரியத்திடம் அளித்த மனு விபரம்: ஜவ்வரிசியை உணவு பாதுகாப்பு விதிப்படி மரவள்ளிக் கிழங்கில் இருந்து தான் தயாரிக்கப்பட வேண்டும். பல ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் மக்காச்சோள மாவை கலப்படம் செய்து வருகின்றனர். இதனால், தொழில் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. கலப்படம் செய்யும் ஆலைகளின், அனைத்து உரிமங்களையும் குறைந்தது ஓராண்டுக்கு ரத்து செய்ய வேண்டும். இந்நிலையில், கலப்படத்துக்காக கடந்த மாதம் பேளுக்குறிச்சியில் பிடிபட்ட ஆலை மற்றும் பச்சுடையாம்பாளையம் ஆலைகள் இயக்குவதற்கு மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. மாவட்ட கலெக்டர் தலையிட்டு, கலப்பட்ட ஜவ்வரிசி ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Categories: DISTRICT-NEWS, Namakkal
%d bloggers like this: