Home > NEWS > கோடம்புளி, பாமாயில் உட்பட தாவர எண்ணெய் கொழுப்புகளை சாக்லேட்டில் பயன்படுத்த அனுமதி

கோடம்புளி, பாமாயில் உட்பட தாவர எண்ணெய் கொழுப்புகளை சாக்லேட்டில் பயன்படுத்த அனுமதி

27,May, 2017

புதுடெல்லி: சாக்லேட்களில் தாவர எண்ணெய் கொழுப்பு பயன்படுத்த உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
சாக்லேட் தயாரிக்க முக்கிய பொருளாக கோகோ பட்டர் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு பதிலாக தாவர எண்ணெய் கொழுப்புகளை பயன்படுத்த அனுமதி தர வேண்டும் என்று சால்வட்ன் எக்ஸ்டிராக்டர்ஸ் சங்கம் (எஸ்இஏ) உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திடம் (எப்எஸ்எஸ்ஏஐ) வலியுறுத்தி வந்தது. இந்நிலையில், இந்த பரிந்துரைக்கு தர நிர்ணய ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து இந்த சங்கத்தினர் கூறுகையில், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் கடந்த 15ம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில், மங்குஸ்தான் குடும்பத்தை சேர்ந்த முருகல் தாவரம், இலுப்பை எண்ணெய், பாமாயில், கோடம்புளி உள்ளிட்ட தாவரங்களில் இருந்து பெறப்படும் எண்ணெய் கொழுப்புகளை சாக்லேட் தயாரிக்க பயன்படுத்தலாம். சாக்லேட் தயாரிப்புக்கு சேர்க்கப்படும் பொருட்களில் இவை 5 சதவீதத்துக்கு மேல் மிகக்கூடாது என தெரிவித்துள்ளது.
கோகோ பட்டருக்கு இணையான தாவர கொழுப்புகளை பயன்படுத்தி சாக்லேட்கள் தயாரிக்க ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் அனுமதி உள்ளது. இந்தியாவில் இதற்கான அனுமதி தற்போதுதான் கிடைத்துள்ளது. இதன்மூலம் உள்நாட்டு உற்பத்தி ஊக்குவிக்கப்படுவதோடு, எண்ணெய் வித்து தொழிலில் ஈடுபட்டுள்ள பழங்குடி மக்கள் பலர் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories: NEWS
%d bloggers like this: