Home > Thoothukudi > பாக்கெட் தண்ணீர் குடித்த 2 வாலிபர்கள் மயங்கினர்

பாக்கெட் தண்ணீர் குடித்த 2 வாலிபர்கள் மயங்கினர்

30,May, 2017

ஆறுமுகநேரி காயல்பட்டினத்தில் பாக்கெட் தண்ணீர் குடித்த இரு வாலிபர்கள் வாந்தி எடுத்து மயங்கினர்.
காயல்பட்டினம் மன்னர்ராஜா கோவில் தெருவைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து (31). இவரும், பூந்தோட்டத்தைச் சேர்ந்த பாலமுருகனும் (39) காயல்பட்டினம் பஸ் நிலையம் அருகேயுள்ள கடையில் தண்ணீர் பாக்கெட் வாங்கி குடித்தனர். சிறிது நேரத்தில் வாந்தி எடுத்த இருவரும் திடீரென மயங்கி விழுந்தனர். அக்கம்பக்கத்தினர் இவர்களை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தகவலறிந்து இருவரிடமும் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் தங்கவிக்னேஷ், உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் பொன்முத்து ஞானசேகர், சிவபாலன் உள்ளிட்டோர் நடந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Categories: Thoothukudi
%d bloggers like this: