Home > DISTRICT-NEWS, Erode > அந்தியூர் அருகே பாக்கு குடோன்களில் சோதனை: ரூ.20 லட்சம் மதிப்புள்ள பாக்குகள் பறிமுதல்

அந்தியூர் அருகே பாக்கு குடோன்களில் சோதனை: ரூ.20 லட்சம் மதிப்புள்ள பாக்குகள் பறிமுதல்

2,June, 2017

அந்தியூர்: பாக்கு குடோன்களில், சேதனை மேற்கொண்டு, 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பாக்குகளை, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே காட்டூரில், 15க்கும் மேற்பட்ட பாக்கு குடோன்கள் செயல்படுகின்றன. வெளி மாநிலங்களில் இருந்து பாக்கு கொட்டைகளை வாங்கி, அவற்றை நறுக்கி வேக வைத்து, அவற்றுடன் சில ரசாயண பொருட்கள் சேர்த்து, பாக்கு தயார் செய்யப்படுகிறது. இவற்றை, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் விற்பனை செய்கின்றனர். வெளி மாவட்டங்களில் இருந்து, மொத்த வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். இப்பகுதியில், தயாராகும் பாக்குகளில் புற்றுநோய் உருவாக்கக் கூடிய ரசாயனம் கலப்பதாக, அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதயைடுத்து, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி கருணாநிதி தலைமையில், பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேற்று மாலை, பாக்கு குடோன்களில் சோதனையில் ஈடுபட்டனர். எட்டு குடோன்களில் ஆய்வு செய்து, அங்கிருந்த ரசாயன பவுடர் மற்றும் திரவங்களை பறிமுதல் செய்து, அவற்றின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, மதுரையில் உள்ள உணவு பாதுகாப்பு ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விற்பனைக்கு தயாராக இருந்த, 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பாக்குகளை பறிமுதல் செய்து, அங்குள்ள குடோன் ஒன்றில் வைத்து, ‘சீல்’ வைக்கப்பட்டது. ‘புற்றுநோய் உருவாக்கும் ரசாயனம் பாக்கில் இருப்பது, ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டால், பாக்கு தயாரித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Categories: DISTRICT-NEWS, Erode
%d bloggers like this: