Home > DISTRICT-NEWS, Madurai > பாலின் தரம் அறியும் விழிப்புணர்வு முகாம் – மதுரை ஆட்சியர் ஏற்பாடு

பாலின் தரம் அறியும் விழிப்புணர்வு முகாம் – மதுரை ஆட்சியர் ஏற்பாடு

8,June, 2017

மதுரை: பாலில் உள்ள தரம் மற்றும் கலப்படத்தை அறிவதற்காக மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் சார்பாக விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற உள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், வருகின்ற ஜூன் 8, 12, 14, 16 மற்றும் 19ஆம் தேதிகளில் மதுரை மாவட்டத்தில் நடைபெறும் இந்த முகாமில் பால் மற்றும் உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, உடனடியாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு முடிவுகளும் உடனடியாக அறிவிக்கப்படவுள்ளது.

ஜூன் 8ஆம் தேதி மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட புதூர் பேருந்து நிலையம், ஜூன் 12ஆம் தேதி மேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட தாலுகா அலுவலகம், ஜூன் 14ஆம் தேதி வாடிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட சமயநல்லூர் நாடார் மகால், ஜூன் 16ஆம் தேதி திருமங்கலம் தாலுகாவில் அசேஃபா சேவா பால் நிறுவனம், ஜூன் 19ஆம் தேதி உசிலம்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட உசிலம்பட்டி பேருந்து நிலையத்திலும் இந்த முகாம்கள் நடைபெறவுள்ளன.
மேற்கண்ட தேதிகளில் நடைபெறும் முகாம்களில், பால் உணவு மாதிரிகள் பகுதி வாரியாக சேகரிக்கப்பட்டு உணவு பகுப்பாய்வு செய்யப்பட்டு முடிவுகள் உடனடியக அறிவிக்கப்படும். இதன் மூலம் பொது மக்களுக்கு பாலில் உள்ள தரம் மற்றும் கலப்படம் குறித்த தன்மை தெரிவிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது.
பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் பால் மற்றும் பால் உணவுப் பொருட்களை கொண்டு வந்து அதன் தரத்தை அறிந்து கொள்ளலாம் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் இ.ஆ.ப., வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

Categories: DISTRICT-NEWS, Madurai
%d bloggers like this: