Home > DISTRICT-NEWS, Ramanathapuram > கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் பறிமுதல்

கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் பறிமுதல்

12,June, 2017

இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில், கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர்.

கமுதியில் விற்கப்படும் கார்பைடு மாம்பழங்களால், பொதுமக்களுக்கு வயிற்றுக் கோளாறு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டதாக, உணவு பாதுகாப்பு துறையினருக்கு புகார் சென்றது.

இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், வலம்புரி என்பவரது கிடங்கில் கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 4 டன் மாம்பழங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. மாம்பழங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், துப்புரவு பணியாளர்கள் உதவியுடன் அவற்றை குப்பைக் கிடங்கில் கொட்டி, கிருமி நாசினி தெளித்து அழித்தனர்.

%d bloggers like this: