Home > DISTRICT-NEWS, Tiruppur > பிளாஸ்டிக் அரிசி குறித்து மக்களுக்கு… அச்சம் வேண்டாம்! உணவு பாதுகாப்பு துறையினர் அறிவுரை

பிளாஸ்டிக் அரிசி குறித்து மக்களுக்கு… அச்சம் வேண்டாம்! உணவு பாதுகாப்பு துறையினர் அறிவுரை

12,June, 2017

உடுமலை : உடுமலை நகரில், பிளாஸ்டிக் அரிசி குறித்து, மொத்த வியாபார நிறுவனங்கள் மற்றும் சில்லரை விற்பனை கடைகளில், உணவுப் பாதுகாப்புத் துறையினனர் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் அரிசி விற்பனை இருக்கிறதா என்பதை கண்டறிய சோதனை நடந்து வருவதால் பொது மக்கள் பீதியில் உள்ளனர். சீன மோகம் அதிகரித்து வரும் நிலையில் தற்போது பிளாஸ்டிக் முட்டை, பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் சர்க்கரை போன்ற உணவு பொருட்களும் சந்தையில் ஊடுருவ தொடங்கியுள்ளன. சமீபத்தில், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பிளாஸ்டிக் அரிசி, சர்க்கரை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து தமிழகத்தில், உணவு பாதுகாப்பு துறையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.இதனை சாப்பிட்டால் உடலுக்கு பல கேடுகள் வரும் என்பதால், இதனை தடுக்க தமிழக உணவு பாதுகாப்பு துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டும் வருகின்றனர். இதையடுத்து, அனைத்து அரிசி கிடங்குகள், அரிசி ஆலைகள், மொத்த வியாபார நிறுவனங்கள், சில்லரை விற்பனை கடைகளில், உணவுபாதுகாப்புத் துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். சந்தேகத்துக்கு இடமான வகையில் அரிசி இருந்தால், அதன் மாதிரிகள் பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. உடுமலையில், உணவுபாதுகாப்பு அலுவலர்கள் காமராஜ், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மொத்த வியாபார நிறுவனங்கள் மற்றும் சில்லரை விற்பனை கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். கண்டறிதல் பிளாஸ்டிக் அரிசி தனியாக விற்பனை செய்யப்படுவதில்லை. இவை அரிசியுடன் கலக்கப்பட்ட பின்னரே விற்பனைக்கு வருகிறது. தவிர, சமைத்தால் மட்டுமே அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்யப்பட்டிருப்பதைக் கண்டுபிடிக்க முடியும். சமைத்த பிறகு பிளாஸ்டிக் அரிசி முழுவதும் வேகாமல் முரட்டுத்தன்மையுடன் இருக்கும். பொதுவாக அரிசியை வேகவைத்தால் அதில் இருக்கும் ‘ஸ்டார்ச்’, படலமாகப் படியும். பிளாஸ்டிக் அரிசி வேகும்போது கண்ணாடி போன்ற படலம் வரும். இதை வெயிலில் காயவைத்தால் மெல்லிய பிளாஸ்டிக் ‘ஷீட்’ போல மாறிவிடும். பிளாஸ்டிக் அரிசியை நெருப்பில் காட்டினால் சர்க்கரைவள்ளிக் கிழங்கின் மணம் வெளிப்படும்.பாதிப்புபிளாஸ்டிக் அரிசி எளிதில் ஜீரணம் ஆகாது. தொடர்ந்து இதை சாப்பிட்டு வந்தால், பிளாஸ்டிக் பைகளை உட்கொள்வதற்குச் சமமான பாதிப்பு ஏற்படும். குடல் இயக்க செயல்பாடு சார்ந்த பிரச்னைகளில் துவங்கி, உயிரிழப்பில் முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். தவிர்க்கும் வழிஉள்ளூர் தயாரிப்புகளைப் புறக்கணிப்பதும், அவற்றைக் குறைத்து மதிப்பிடுவதுமே பெரும்பாலான மக்களின் அணுகுமுறையாகும். ஆகையால், உள்ளூர் உற்பத்தியை பெருக்குவதும், அவற்றுக்கான செயல்களில் நுகர்வோராக இருக்கும் பொதுமக்கள் நேரடியாக ஈடுபட வேண்டும். தவிர, அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குக் கூட வணிக நிறுவனங்களின் பதப்படுத்தப்பட்ட உணவை நம்பியிருக்கும் நிலை மாற வேண்டும்.நம்பிக்கை நிறைந்த உள்ளூர் வியாபாரிகள் மற்றும் விவசாயிகளிடம் இருந்து அரிசியைக் கொள்முதல் செய்வதன் மூலம் கலப்பட அரிசியில் இருந்து தப்பிக்கலாம். \கலப்பட அரிசி சிக்கவில்லைஉணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்திலும் பிளாஸ்டி அரிசி விற்பனை செய்யப்படுகிறதோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. ஆகையால், தாலுகா வாரியாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, அரிசி கடைகள் மற்றும் மண்டிகளில் அதிகளவு ஆய்வு நடத்தப்படுகிறது. அரிசி மாதிரியை எடுத்து தண்ணீர் போட்டு பார்த்தும், தீப்பொறி அருகே வைத்தும் சோதனை செய்யப்படுகிறது. சமையலுக்கு முன்பாக, அரிசியை தண்ணீரில் களையும் போது, பிளாஸ்டிக் அரிசியாக இருந்தால், மிதக்கும். திருப்பூர் மாவட்டத்தில், எங்கும் கலப்பட அரிசி சிக்கவில்லை. ஆகையால், பொதுமக்கள் இது குறித்து அச்சப்பட தேவையில்லை. இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்

Categories: DISTRICT-NEWS, Tiruppur
%d bloggers like this: