Home > DISTRICT-NEWS, Tirunelveli > மானூர் பகுதி கடைகளில் பிளாஸ்டிக் அரிசி சோதனை

மானூர் பகுதி கடைகளில் பிளாஸ்டிக் அரிசி சோதனை

15,June, 2017

மானூர்: மானூர்  பகுதியிலுள்ள  கடைகளில் பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுகிறதா? என உணவு பாதுகாப்பு அலுவலர் சோதனை நடத்தினார். ஆந்திரா, கர்நாடகா, உத்தரகாண்ட் மாநிலங்களில் சமீபத்தில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிளாஸ்டிக் அரிசி கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து தமிழகத்திலும் உணவு பாதுகாப்பு துறையினர் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இருப்பினும் இதுவரை பிளாஸ்டிக் அரிசி சிக்கவில்லை.
இந்நிலையில் மானூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் கிருஷ்ணன் அப்பகுதியில் உள்ள அரிசி கடைகளில் திடீர் சோதனை நடத்தினார். மானூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து கடைகளிலும் இந்த சோதனை நடந்தது. ஆனால், பிளாஸ்டிக் அரிசி எதுவும் சிக்கவில்லை. இதுகுறித்து அவர் கூறுகையில், ‘மாவட்ட  உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் செந்தில்குமார் அறிவுரைப்படி  மானூர்  பகுதியில்  உள்ள அரிசி கடைகள் மற்றும் குடோன்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அரிசியை தண்ணீரில் போட்டும், தீயில் பொறித்தும் பார்க்கப்பட்டது. ஆனால் பிளாஸ்டிக் அரிசி எதுவும் சிக்கவில்லை’ என்றார்.

Categories: DISTRICT-NEWS, Tirunelveli
%d bloggers like this: