Home > DISTRICT-NEWS, Villupuram > விழுப்புரத்தில் குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

விழுப்புரத்தில் குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

1,July, 2017

விழுப்புரத்தில் குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

விழுப்புரத்தில் குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம் நகரில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியனுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் நேற்று மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் வரலட்சுமி தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கரலிங்கம், ரவிக்குமார், கதிரவன், சையத் இப்ராகிம், ஜெயராஜ், ரமேஷ் ஆகியோர் விழுப்புரம் பாகர்ஷா வீதி, எம்.ஜி.சாலை, நேருஜி சாலை உள்ளிட்ட இடங்களில் உள்ள 50–க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் குடோன்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

அப்போது ஒரு குடோனில் 300 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். இதையடுத்து அந்த புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக குடோன் உரிமையாளரான நாராயணனுக்கு உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி அதிகாரிகள் எச்சரிக்கை நோட்டீசு கொடுத்தனர். தொடர்ந்து, அந்த குடோனை பூட்டி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தீ வைத்து அழிக்கப்பட்டது.

Categories: DISTRICT-NEWS, Villupuram
%d bloggers like this: