Home > DISTRICT-NEWS, Thoothukudi > பரிசு கூப்பனுடன் விற்பனை செய்யப்பட்ட போதைபொருட்கள் பறிமுதல்

பரிசு கூப்பனுடன் விற்பனை செய்யப்பட்ட போதைபொருட்கள் பறிமுதல்

4,July, 2017

 

தூத்துக்குடி: கோவில்பட்டியில் பரிசு கூப்பனுடன் விற்பனை செய்யப்பட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவில்பட்டியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலகத்திற்கு வந்த தகவலை தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தங்கவிக்னேஷ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மார்க்கெட் ரோடு, மெயின் ரோடு, கடலைக்காரத் தெரு உள்ளிட்ட பகுதியில் சோதனை நடத்தினர்.

கடலைக்காரத் தெருவில் உள்ள ஒரு கடை மற்றும் குடோனில் நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா மற்றும் புகையிலை பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதனை உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
இதன் மதிப்பு சுமார் ரூ.1லட்சம் வரை இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தவிர பரிசு கூப்பனுடன் புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்பட்டதும், மேலும் பரிசாக வெள்ளி வழங்கப்பட்டதும் சோதனையில் தெரியவந்துள்ளது.

Categories: DISTRICT-NEWS, Thoothukudi
%d bloggers like this: