Home > DISTRICT-NEWS, Salem > உணவு பாதுகாப்பு துறை திடீர் சோதனை: ரூ.5 லட்சம் மதிப்பு பொருட்கள் பறிமுதல்

உணவு பாதுகாப்பு துறை திடீர் சோதனை: ரூ.5 லட்சம் மதிப்பு பொருட்கள் பறிமுதல்

6,July, 2017

சேலம்: உணவு பாதுகாப்பு துறை சோதனையில், 4.95 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள், பறிமுதல் செய்யப்பட்டன.
சேலம் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள், ஐந்து குழுவாக, நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். மாலை, 3:30 முதல், இரவு, 8:00 வரை நடந்த சோதனையில், ஐந்து ரோடு, அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி உள்பட நான்கு இடங்களில் உள்ள தனியார் நிறுவனத்தில், காலாவதி, உணவு பாதுகாப்பற்ற, விபரங்கள் குறிப்பிடாத, 4.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மளிகை கடைகளில் காலாவதியான, 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நெய், செவ்வாய்ப்பேட்டையில், 35 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் என, மொத்தம், 4.95 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள், ஒரே நாளில் பறிமுதல் செய்து, சீல் வைக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன் கூறுகையில், ”பறிமுதல் செய்த பொருட்கள் மாதிரி எடுத்து, சென்னைக்கு அனுப்பப்படும். உணவு பொருள் அங்காடி, ஷாப்பிங் மால்களில், தொடர் சோதனை மேற்கொள்ளப்படும்,” என்றார்.

Categories: DISTRICT-NEWS, Salem
%d bloggers like this: