Home > DISTRICT-NEWS, Perambalur > பாதுகாப்பான உணவு பொருள் விற்பதை கண்காணிக்க 35 இடங்களில் வாரம் இருமுறை ஆய்வு மாவட்ட நியமன அலுவலர் உத்தரவு

பாதுகாப்பான உணவு பொருள் விற்பதை கண்காணிக்க 35 இடங்களில் வாரம் இருமுறை ஆய்வு மாவட்ட நியமன அலுவலர் உத்தரவு

6,July, 2017

பெரம்பலூர் : பாதுகாப்பான உணவுப்பொருள்விற்பதை கண்காணிக்க, பதிவு உரிமம்பெற விழிப்புணர்வு ஏற்படுத்த, பெரம்பலூர் மாவட்டத்தில் 35இடங்களில் வாரம் இருமுறை ஆய்வுநடத்த உணவுப் பாதுகாப்புத்துறை மாவட்ட நியமனஅலுவலர் உத்தரவிட்டுள்ளார்.. பெரம்பலூர் கலெக்டர்அலுவலகத்திலுள்ள உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலகத்தில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் பங்கேற்ற சிறப்புக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் உணவுப்பாதுகாப்பு அலுவலர்கள் பெரம்பலூர் சின்னமுத்து (நகர்ப்புறம்), வேப்பூர்அழகுவேல், வேப்பந்தட்டை ரத்தினம், ஆலத்தூர் ரவி உள்ளிட் டோர் கலந்துகொண்டனர். கூட்டத்திற்கு உணவுப் பாதுகாப்புத்துறையின் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ஜெகன்நாதன்(பொ) தலைமை வகித்துப் பேசியதாவது :
பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் நகரம் மட்டுமன்றி முக்கிய வியாபார தலங்களாகக் கண்டறியப்பட்டுள்ள அரும்பாவூர், பூலாம்பாடி, கிருஷ்ணாபுரம், வேப்பந் தட்டை, கை.களத்தூர், வி.களத்தூர், வாலிகண்டபுரம், சின்னாறு, லெப்பைக்குடிகாடு, அகரம்சீகூர், வேப்பூர், குன்னம், பாடாலூர், கொளக்காநத்தம், நக்கசேலம், செட்டிக் குளம், மலையாளப்பட்டி, அன்னமங்கலம் உள்ளிட்ட 35இடங்களில் உள்ள உணவ கங்கள், டீக்கடைகள், இனிப்பகங்கள், பழக்கடைகள், பேக்கரிகள் போன்றவற்றில் சுகா தாரமான, பாதுகாப்பான உணவுப்பொருட்கள் விற்கிறதா என கண்காணிக்க வேண்டும்.
மேலும் அப்பகுதிகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களான பான் பராக், பான்மசாலா, குட்கா, ஹான்ஸ் போன்றவை விற்கப்படுகிறதா எனவும் தீவிர மாகக் கண்காணிக்க வேண்டும். அதோடு பழக்கடைகளில் கார்பைட் ரசாயனக் கற் களை வைத்து பழங்களை பழுக்கவைப்பது, வாழைத்தார்களை எத்திப்பான் ஸ்பிரேயர் கள்மூலம் பழுக்கவைப்பது முற்றிலும் தடைசெய்யப்பட வேண்டும். அதோடு, உற்பத் தித்தேதி, காலாவதிதேதிகள் அச்சிடப்பதாத, காலாவதியான, முகவரிஇல்லாத குளிர் பான பாட்டில்கள், வாட்டர் பாக்கெட்டுகள் பறிமுதல்செய்து அழிக்கப்பட வேண்டும்.
உணவகங்களின் உரிமையாளர்கள் பதிவுஉரிமம் பெறுவது குறித்தும், பாதுகாப் பான உணவுப்பொருள் விற்கப்படுவது குறித்தும் வாரம்இருமுறை சிறப்பாய்வுசெய்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மீண்டும் மீண்டும் தவறுசெய்வோர் மீது உணவுப் பாதுகாப்பு சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிந்து, கடுமையான மேல்நடவடிக்கைகளுக் குப் பரிந்துரைக்கப் படுமென எச்சரிக்கவேண்டும். பொதுஇடங்களில் அனு மதியின்றி யோ,சுகாதாரமற்ற, அறுவறுக்கத்தக்க நிலையிலோ இறைச்சிகள் விற்கப்படுவது தடை செய்யப்பட வேண்டும் என்றார்.

Categories: DISTRICT-NEWS, Perambalur
%d bloggers like this: