Home > DISTRICT-NEWS, Namakkal > தரமற்ற உணவு பொருட்கள்: அதிகாரிகள் ஆய்வு செய்வரா?

தரமற்ற உணவு பொருட்கள்: அதிகாரிகள் ஆய்வு செய்வரா?

15,July, 2017

ப.வேலூர்: ப.வேலூர் கடைகளில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்த கோரிக்கை எழுந்துள்ளது.
ப.வேலூர் மற்றும் பரமத்தி, பாண்டமங்கலம், பொத்தனூர் ஆகிய பகுதிகளில், நொறுக்கு தீனி, கூல்ட்ரிங்க்ஸ், தண்ணீர் பாக்கெட்டுகள் மற்றும் பாட்டில்கள், பிஸ்கெட் பாக்கெட்டுகள் தேதி குறிப்பிடப்படாமலும், காலாவதியானவையும் விற்கப்பட்டு வருவதாக மக்களிடம் புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, ப.வேலூரை சேர்ந்த பரமேஸ்வரன் கூறியதாவது: கடைகளில் விற்கப்படும் தின்பண்டங்களை வாங்கினால், தயாரிக்கப்பட்ட மற்றும் காலாவதியாகும் தேதி இல்லை. வீட்டிற்கு சென்று பிரித்தால், தரமற்ற எண்ணெயால் தயாரிக்கப்பட்டு, வாடை வீசுகிறது. இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்க, அனைத்து குடிசைத்தொழில் தின்பண்ட பாக்கெட்டுகளிலும், பேக்கிங் மற்றும் காலாவதி தேதி குறிப்பிடப்பட வேண்டும். கடந்த பல மாதங்களாக, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் முறையான ஆய்வு மேற்கொள்ளாததே இதற்கு காரணம். வரும்போதெல்லாம், பெயரளவில் சோதனை மேற்கொண்டு செல்கின்றனர். முறையான ஆய்வு மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Categories: DISTRICT-NEWS, Namakkal
%d bloggers like this: