Home > Dharmapuri, DISTRICT-NEWS > தருமபுரி பழக்கடைகளில் திடீர் சோதனை

தருமபுரி பழக்கடைகளில் திடீர் சோதனை

15,July, 2017

தருமபுரி நகரப் பகுதிகளில் உள்ள பழக்கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மேற்கொண்ட தீவிர சோதனையில் அழுகிய நிலையில் பழங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

தருமபுரி நகரப்பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிலையம் அருகே உள்ள கடைவீதிகளில் பழக்கடைகள் உள்ளது இங்கு ஆப்பிள், மாம்பழம், திராட்சை உள்ளிட்ட பலவகையான பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் பேருந்து நிலையத்தில் உள்ள கடையில் ஆப்பிள் வாங்கி சாப்பிட்ட ஒருவருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் உணவு பாதுகாப்பு அலுவலா்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். அதனை தொடா்ந்து  மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலா் பிருந்தா தலைமையில் அதிகாரிகள் ஆய்வுமேற்கொண்டனர்.
முதலில் ஆப்பிள் பழங்களில் பளபளப்பாக்க மெழுகு தடவப்பட்டுள்ளனவா என சோதனை செய்த அதிகாரிகள் பின் ஆப்பில் குடோனில் செய்த ஆய்வில் சுமார் அரைடன் ஆப்பிள் பழங்கள் அழுகிய நிலையில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளதை கண்டறிந்து அதனை கைப்பற்றினா்.
அழுகிய பழங்களை பழரசம் விற்பனை செய்யும் கடைகளுக்கு குறைந்த விலைக்கு விற்கபடுவதை கண்டறிந்த அதிகாரிகள், பறிமுதல் செய்யப்பட்ட பழங்களை தடங்கம் அருகே அழிக்க உத்தரவிடப்பட்டனர்.

Categories: Dharmapuri, DISTRICT-NEWS
%d bloggers like this: