Home > DISTRICT-NEWS, Perambalur > உணவுப் பொருள்களை விற்பனை செய்ய பதிவு, உரிமம் பெற வேண்டும்’

உணவுப் பொருள்களை விற்பனை செய்ய பதிவு, உரிமம் பெற வேண்டும்’

20,July, 2017

உணவுப் பொருள்களை விற்பனை செய்ய தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறையின் கீழ், பதிவு அல்லது உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.
தரமான, பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் 5.08.2011 முதல் நகரம், கிராமம் என்ற பாகுபாடின்றி, இந்தியா முழுவதும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 அமலில் உள்ளது. ஏற்கெனவே, உணவு வியாபாரிகளுக்கு 5.8.2011 முதல் பதிவு மற்றும் உரிமம் பெறுவதற்காக போதிய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, தற்சமயம் உணவு வியாபாரிகள் அவர்களது விற்பனை கொள்முதல் தொகைக்கேற்ப உரிமம் அல்லது பதிவு பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
உணவு வியாபாரிகள் தங்களது விற்பனை கொள்முதல் தொகைக்கேற்ப ரூ. 100 அல்லது ரூ. 2,000 செலுத்து சீட்டு (சலான்) மூலம் கருவூலம் சம்பந்தப்பட்ட வங்கியில் செலுத்தி  ‌w‌w‌w.‌f‌o‌o‌d‌l‌i​c‌e‌n‌s‌i‌n‌g.‌f‌s‌s​a‌i.‌g‌o‌v.‌i‌n  என்ற இணையதள முகவரியில் தங்களது விவரங்களை பதிவேற்றம் செய்து, அந்த ஆவணங்கள், விண்ணப்பத்தின் அசல் மற்றும் நகலுடன் இணைத்து மாவட்ட நியமன அலுவலரிடம் நேரில் அல்லது அஞ்சல் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.  ஏற்கெனவே பதிவு மற்றும் உரிமம் உள்ளவர்கள் காலாவதியாவதற்கு முன் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு புதுப்பித்துக் கொள்ளும் பட்சத்தில் தங்களது உணவுப்பொருளின் பொட்டலத்தில் அச்சிட்டுள்ள பதிவு, உரிம எண் பெறுவதோடு அபராதத் தொகையை தவிர்க்கலாம். மேலும், வணிகர்கள் தங்களது வணிக கடைகளுக்கு உரிமம் பெறுவதற்கான சிரமங்களை குறைக்கும் வகையில், அந்தந்த வட்டங்களில் உள்ள இ- சேவை மையங்கள் மூலமாக பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள், நுகர்வோர், உணவு விற்பனையாளர்கள், மாணவ, மாணவிகள் தங்களது உணவுப் பொருள்களின் தரம் குறித்து உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையருக்கு 9444042322 என்ற எண்ணின் மூலம் கட்செவி (வாட்ஸ்அப்) மூலமாக புகார் தெரிவிக்கலாம். புகார்களுக்கு 24 மணி நேரத்தில் உணவுப் பாதுகாப்பு துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு குறைகள் சீரமைக்கப்படும்.  
உணவு பாதுகாப்பு, தரம் குறித்த தகவல்கள் மற்றும் விளக்கங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள நியமன அலுவலர், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை, உணவு பாதுகாப்புப் பிரிவு அலுவலகத்தை 04328-224033 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Categories: DISTRICT-NEWS, Perambalur
%d bloggers like this: