Home > NEWS > போதைப் பொருட்கள் விற்றால் குண்டர் சட்டம் பாயும்

போதைப் பொருட்கள் விற்றால் குண்டர் சட்டம் பாயும்

31,July, 2017

குட்கா, கஞ்சா, மாவா உள்ளிட்ட போதைப் பொருட்களை தயாரிப்பவர்கள் மற்றும் விற்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

புற்றுநோயை உண்டாக்கும் போதைப் பொருட்களான வாய்ப்புகையிலை, குட்கா, மாவா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. இதுபோன்ற போதைப் பொருட்களை இருப்பு வைத்து கடைகளும் உடனடியாக அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தது.

இதைத்தொடந்து தமிழகம் முழுவதும் உள்ள குடோன்கள் மற்றும் கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பல்வேறு இடங்களில் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குட்கா போன்ற தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை இனிமேலும் விற்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories: NEWS
%d bloggers like this: