Home > DISTRICT-NEWS, Tiruvannamalai > திருவண்ணாமலை மாவட்டத்தில் வணிகர்கள் லைசென்ஸ் பெற விழிப்புணர்வு நோட்டீசு

திருவண்ணாமலை மாவட்டத்தில் வணிகர்கள் லைசென்ஸ் பெற விழிப்புணர்வு நோட்டீசு

9,January, 2018

திருவண்ணாமலை, ஜன.8: திருவண்ணாமலை மாவட்டத்தில் உணவு வணிகர்கள் லைசென்ஸ் பெறுவது குறித்து உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள விழிப்புணர்வு நோட்டீஸ்களை கடை, கடையாக வழங்கினர். நாடு முழுவதும் சாலையோர டிபன் கடைகள், சில்லி சிக்கன் கடைகள், காய்கறி, பழம் விற்பனை செய்பவர்கள் உள்பட பல்வேறு உணவு பொருள் விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்புத்துறையில் தங்களுடைய பெயரை பதிவு செய்தல் மற்றும் லைசென்ஸ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் உச்சநீதிமன்றம் அனைத்து உணவு பொருட்கள் விற்பனை செய்யும் உணவு வணிகர்களும் தங்களது கடைகளுக்கு கட்டாயம் லைசென்ஸ் பெற வேண்டும் என்று உத்தரவிட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 17 ஆயிரத்து 420 கடைகள் உள்ளன. இதில் 4 ஆயிரத்து 336 கடை உரிமையாளர்கள் மட்டுமே லைசென்ஸ் பெற்றுள்ளனர். மற்ற கடைக்காரர்கள் இன்னும் லைசென்ஸ் பெறவில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் மாவட்ட நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் கலைஷ்குமார், சுப்பிரமணி ஆகியோர் கொண்ட குழுவினர் மாவட்டம் முழுவதும் கடை, கடையாக வணிகர்கள் லைசென்ஸ் பெறுவது குறித்து விழிப்புணர்வு நோட்டீசுகளை வழங்கி வருகின்றனர். இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட நியமன அலுவலர் செந்தில்குமார் கூறியதாவது:
திருவண்ணாமைலை மாவட்டத்தில் உள்ள வணிகர்கள் கட்டாயம் லைசென்ஸ் பெற வேண்டும். ஒவ்வொரு வட்டாரத்துக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தங்கள் பகுதியில் இருக்கும் கடைகள் லைசென்ஸ் பெற்றுள்ளனரா? என்பது குறித்து ஆய்வு நடத்தி வருகிறார்கள். லைசென்ஸ் பெற்ற விவரத்தை வணிகர்கள் தங்களது கடையில் பொதுமக்கள் பார்வையில் தெரியும்படி வைக்க வேண்டும். http://www.fssai.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் வணிகர்கள் தங்களது பணத்தை செலுத்தலாம். லைசென்ஸ் பெறாத வணிகர்கள் மீது உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

%d bloggers like this: