Home > Ariyalur, DISTRICT-NEWS > திருமானூர் பகுதி கடைகளில் ஆய்வு

திருமானூர் பகுதி கடைகளில் ஆய்வு

10,February, 2018

அரியலூர் மாவட்டம், திருமானூர் பகுதிகளிலுள்ள கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனர்.
மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி, உணவுப் பாதுகாப்பு துறை ஆணையர் அமுதா அறிவுறுத்தலின்படி, மாவட்ட நியமன அலுவலர் ஜெகநாதன் முன்னிலையில், உணவுப் பாதுகாப்பு துறையை சேர்ந்த ஸ்டாலின்பிரபு, வசந்தன் ஆகியோர் திருமானூர் பகுதிகளிலுள்ள கடைகளில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் பள்ளிகளுக்கு அருகிலுள்ள கடைகளில்,பள்ளி குழந்தைகள்,மாணவ,மாணவிகள் உண்ணக்கூடிய தின்பண்டங்களை அவர்கள் ஆய்வு செய்தனர். குறிப்பாக வெளிமாநில சாக்லெட்டுகள் ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வின்போது, சந்தேகப்படும்படியாக இருந்த சாக்லெட்டை உணவு மாதிரி எடுத்து ஆய்விற்கு அனுப்பினர்.
மேலும், காலாவதியான குளிர்பானங்கள்,உணவுப் பொருள்கள், தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. இந் ஆய்வு மாவட்டம் முழுவதும் தொடரும் என அலுவலர்கள் தெரிவித்தனர். வணிகர்கள் தரமான பொருள்களை வாங்கி விற்கவும், வாங்கும் நுகர்வோர் பொருள்களின் காலாவதி தேதியைப் பார்த்து வாங்கிப் பயன்படுத்தவும் விழிப்புணர்வு செய்யப்பட்டது.

Categories: Ariyalur, DISTRICT-NEWS
%d bloggers like this: