Home > DISTRICT-NEWS, Virudhunagar > உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு; பொருட்கள் பறிமுதல் ‘தினமலர்’ செய்தி எதிரொலி

உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு; பொருட்கள் பறிமுதல் ‘தினமலர்’ செய்தி எதிரொலி

26,April, 2018

அருப்புக்கோட்டை:’தினமலர்’ செய்தி எதிரொலியாக, அருப்புக்கோட்டை கடைகளில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர், சுகாதார மற்ற பொருட்களை பறிமுதல் செய்தார்.
அருப்புக்கோட்டையில் சுகாதாரமற்ற முறையில் தின்பண்டங்களை திறந்த நிலையில், விற்பனை செய்வதாக, ‘ தினமலர்’ நாளிதழில் நேற்று செய்தி வெளியானது.
இதையடுத்து, விருதுநகர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா தலைமையில், 10 உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அருப்புக்கோட்டையில் புதிய பஸ் ஸ்டாண்ட், திருச்சுழி ரோடு, விருதுநகர் ரோடு, மதுரை ரோடு உள்ளிட்ட பகுதி கடைகள், டீக்கடைகள், பேக்கரிகளில் ஆய்வு செய்தனர். தரமற்று விற்பனை செய்ய வைத்திருந்த 25 லிட்டர் குளிர்பானங்கள், லேபிள் இல்லாமல் வைக்கப்பட்டிருந்த 12 கிலோ பொருட்கள், கேப் இல்லாமல் வைக்கப்பட்டிருந்த எண்ணெய் டின்ககளை பறிமுதல் செய்தனர். திறந்தவெளியில் தின்பண்டங்களை விற்கும் கடைகாரர்களுக்கும் எச்சரிக்கை விடப்பட்டது. உரிமம் இல்லாது கடைகள் வைத்திருந்த கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

%d bloggers like this: