Archive

Archive for May, 2018

செயற்கை முறையில் பழுக்கவைத்த மாம்பழங்கள்… பாதிப்புகள் என்னென்ன?

31,May, 2018 Comments off
 

‘காய்கறிகள், பழங்கள், கீரைகள் இவற்றைச் சாப்பிட்டாலே போதும் உடலுக்குத் தேவையான அனைத்துச் சத்துகளும் கிடைத்துவிடும்’ – மருத்துவர்கள் முதல் உணவியல் நிபுணர்கள்வரை வழங்கும் பொதுவான அறிவுரை இது. மேற்கண்ட மூன்றில் காய்கறிகள், கீரைகள் சாப்பிடுவதற்கு விருப்பமில்லாதவர்கள்கூட பழங்களை விரும்பிச் சாப்பிடுவார்கள். சிறியவர் முதல் பெரியவர்கள்வரை அனைவருக்கும் பிடித்ததாகவே பழங்கள் இருக்கின்றன. மனிதன் காடுகளில் வாழ்ந்த காலம்தொட்டே கனிகளைத் தின்று வாழ்ந்துவருகிறான்.

ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, மாம்பழம், மாதுளை, கொய்யா, சீத்தா… என நமக்காகக் கொட்டிக்கிடக்கின்றன விதவிதமான பழங்கள். அதிலும், கோடைக்காலத்தில் எங்கு பார்த்தாலும் மஞ்சள் நிறத்தில் கோபுரம் கோபுரமாக மாம்பழங்கள் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் அழகே தனி. அதன் நிறத்தை, வாசனையைக் கண்டுணர்ந்த பின்னரும் அரை கிலோவாவது வீட்டுக்கு வாங்கிச் செல்லாமல் நம்மால் இருக்க முடியாது. ஆனால், `அப்படி வாங்குவதற்கு முன்னர் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்’ என்கிறார்கள் மருத்துவர்கள்.

காரணம், ரசாயன முறையில் பழங்களை பழுக்கவைப்பது இப்போது அதிகரித்திருக்கிறது. நேற்றுகூட சென்னை, கோயம்பேடு பழ மார்க்கெட்டில் ரசாயன முறையில் பழுக்கவைக்கப்பட்ட ஏழு டன் மாம்பழங்களும், இரண்டு டன் பப்பாளிப் பழங்களும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன. பழங்களை விற்பனை செய்த நான்கு கடைகளும் சீல் வைக்கப்பட்டன.

கோயம்பேடு மார்க்கெட்டில் இப்படி நடப்பதாக புகார் வந்ததால், அதிகாரிகள் சோதனை செய்து நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். ‘சரி… மற்ற இடங்களில் விற்கப்படும் பழங்கள்?’ என்கிற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

"செயற்கையாகப் பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்களைச் சாப்பிட்டால் என்னென்ன பாதிப்புகள் வரும் ?”

"கால்சியம் கார்பைடு, பாஸ்பரஸ், எத்திலீன் போன்ற ரசாயனங்கள் மூலமாகப் பழங்கள் செயற்கையாகப் பழுக்கவைக்கப்படுகின்றன. இப்படிப் பழுக்க வைப்பதால் அதன் இயல்பு பாதிக்கப்படுகிறது. மாம்பழம் சாப்பிடுவதே அதிலுள்ள மினரல்ஸ், மல்டி

வைட்டமின்களுக்காகத்தான். ஆனால், செயற்கையாகப் பழுக்கவைக்கப்பட்டவற்றில் இவை எதுவும் இருக்காது.

செயற்கையாகப் பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்களில் அதன் இனிப்புத்தன்மை அதிகரித்துவிடும். அதைச் சாப்பிட்டால் அடிக்கடி வயிற்றுப்போக்கு, வயிறு மந்தம், சருமப் பிரச்னைகள், அல்சர் போன்ற பாதிப்புகள் உண்டாகும். கால்சியம் கார்பைட் கலந்த உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டால் புற்றுநோய் (Carcinogenic) உண்டாவதற்கான வாய்ப்புண்டு. எனவே, வாங்கும்போது கவனமாகப் பார்த்து வாங்க வேண்டும்’’ என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் சங்கீதா நடராஜன்.

"கால்சியம் கார்பைடால் வயிறு தொடர்பான பிரச்னைகள், கண் எரிச்சல், சரும அலர்ஜி, வாந்தி போன்றவை உண்டாகலாம். சில நேரங்களில் சுவாசம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. இதில், ஆர்சனிக் இருந்தால் புற்றுநோய் உண்டாகவும் வாய்ப்பிருக்கிறது. மாம்பழம் சாப்பிட்டதால் வயிற்றுப்போக்கு கோடைக்காலங்களில் பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும். அதற்குக் காரணம் இதுபோன்று ரசாயனங்கள்தான். இதனால் உடலில் நீர்வறட்சி ஏற்பட்டு, உடல் வலுவிழக்க வாய்ப்பிருக்கிறது. அதனால் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்’’ என்கிறார் மருத்துவர் ஜெயஶ்ரீ.

மாம்பழங்கள் இயற்கையாகப் பழுத்தவையா அல்லது செயற்கையாகப் பழுக்க வைக்கப்பட்டவையா என்று எப்படிக் கண்டறிவது?

"எந்தப் பழமும் பளபளப்பாக இருக்க வாய்ப்பில்லை. அப்படி இருக்கும் பழங்களைத் தவிர்த்துவிடுவது நல்லது

.

* பழுத்த மாம்பழம் கொஞ்சம் கொழகொழப்பாகத்தான் இருக்கும். ஆனால், செயற்கையாகப் பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்கள் அப்படி இருக்காது.

* இயற்கையாகப் பழுத்த பழங்கள் லேசாக அடிபட்டு, கசங்கி முறையான வடிவத்தில் இருக்காது.

* ரசாயனங்கள் மூலமாகப் பழுக்கவைத்தால் பழங்கள் முறையான வடிவத்தில் பழுக்காமல் திட்டு திட்டாக பழுத்திருக்கும்.

* இயற்கையாகப் பழுத்த மாம்பழங்கள் மஞ்சள் நிறத்தில் மட்டுமல்லாமல், சற்று இளஞ் சிவப்பு நிறத்தோடு காணப்படும்.

* மாம்பழத்தில் குறிப்பிட்ட ஓரிடத்தில் மட்டும் தீப்பட்டதுபோல கறுப்பாக இருந்தால், அது கண்டிப்பாக கார்பைட் கல்லால் பழுக்கவைக்கப்பட்டது.

* இயற்கையில் காம்புப் பகுதிதான் கடைசியாகப் பழுக்கும். பழம் காம்பை நோக்கித்தான் பழுத்துக்கொண்டு செல்லும். செயற்கையாகப் பழுக்கவைக்கப்பட்டவை அப்படி இருக்காது’’ என்கிறார் சித்த மருத்துவர் செந்தில் கருணாகரன்.

பழங்கள் ரசாயன முறையில் பழுக்கவைக்கப்படுவது தெரிந்தால், உணவுப் பாதுகாப்புத் துறையின் 9444042322 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பின் மூலம் புகார் தெரிவிக்கலாம்.

லாப நோக்கத்தோடு மக்களுக்கு ஆரோக்கியக்கேட்டை விளைவிக்கும் வியாபாரிகள் கண்டிப்பாக மனம் திருந்த வேண்டும். குழந்தைகள் முதல் வயதானவர்கள்வரை பழங்கள் சாப்பிடுகிறார்கள். ஆசை ஆசையாகப் பழங்கள் சாப்பிடும் அவர்களை ஆபத்தில் சிக்கவைக்கலாமா?

Categories: NEWS

21 oil brands banned in Kozhikode

31,May, 2018 Comments off
 

Sale of coconut oil of 8 companies prohibited.

The Food Safety Department bans the sale of 21 coconut oil brands distributed in Kozhikode and neighbouring districts.

KOZHIKODE: The Department of Food Safety has benned the sale of 21 coconut oil brands of 8 companies distributed in the district and neighbouring districts as all the stuff proved of substandard quality in lab tests. Issued under Section 36, 3 (b) of Food Safety and Standards Act, 2006, the order was issued on May 23 by P.K.Aleyamma, assistant food safety commissioner, Kozhikode. The companies are based at Kozhikode (five) and Palakkad districts (three).

The high price of coconut oil made the shopkeepers to push in low-cost coconut oil brands as the companies provide better margin to shopkeepers. Since palm oil is available for Rs 60-80 per litre, one can easily adulterate coconut oil reaping huge benefits, as coconut oil price touched an all-time high of over Rs 200 per litre recently, say experts.

The coconut oil brands includes SK’s Drop of Nature Ayush, Sree Keerthi, Kelda (by Sreekrishna Flour and Oil Mill, Cheruvannur, Kozhikode) Keral, Vismaya, AS Coconut Oil (AS Oil Mill, Big Bazaar, Kozhikode), PVS Thripthi Pure Coconut Oil, Kavery Brand (Aswathi Oil and Flour Bill, Beypore, Kozhikode), Coco Menma, Agro Brand, (Vishnu Oil Mills, Palakkad), Kera Valley, Famous, Kera Special (Alfa Coconut Oil Mills, Govindapuram, Palakkad), Harita Giri, Annappoorna (Geetha Oil Mills, Narikkuni , Kozhikode) and Orange, Janasree, Keranice and Malabar Supreme (Pavangad Oil Mill, Kozhikode).

Food safety assistant commissioner Aleyamma told DC that her team had collected more than 50 samples from various shops in the district of which 21 brands of eight companies were prohibited in the district.Chemical examination proved that the brands are of inferior quality,.

Categories: NEWS

5 கிலோ கார்பைடு கல் 4 டன் மாம்பழம் பறிமுதல்

31,May, 2018 Comments off

கோயம்பேடு:கோயம்பேடு மார்க்கெட்டில், கார்பைடு கல்லில் பழுக்க வைத்த, 4 டன் பழங்களை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோயம்பேடு, நெற்குன்றம், அழகம்மாள் நகரில் உள்ள குடோனில், கார்பைடு கல் மூலம், மாங்காய்கள் பழுக்க வைக்கப் படுவதாக, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, நேற்று மாலை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், அந்த குடோனை
சோதனையிட்டனர்.
இதில், கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட, 4 டன் மாம்பழங்களை பறிமுதல் செய்தனர்; மேலும், 5 கிலோ கார்பைடு கல்லும் பறிமுதல் செய்யப்பட்டது.

Categories: Chennai, DISTRICT-NEWS

உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாத உணவகங்கள் மீது நடவடிக்கை

31,May, 2018 Comments off

உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாத உணவு வணிகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென கலெக்டர் எச்சரித்துள்ளார்.திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றிருக்க வேண்டும். பெறப்பட்ட உரிமத்தை வாடிக்கையாளர்கள் கண்களுக்கு தெரியும் இடத்தில் வைத்திருக்க வேண்டும். உரிமம் பெறாதவர்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2011 பிரிவு 63ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். உணவகத்தில் 25 உணவு கையாளர்பவர்கள் இருந்தால் 1 மேற்பார்வையாளரை நியமிக்க வேண்டும்.
நியமிக்கப்பட்டவருக்கு உணவு பாதுகாப்பு குறித்த பயற்சி வழங்கப்பட்டு, அவர் மூலமாக மற்ற ஊழியர்களுக்கு உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட வேண்டும். நுகர்வோர் உணவு பாதுகாப்பு உரிமம் கண்ணுக்கு புலப்படும் வகையில் வைக்காத உணவகங்கள் மீது மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலரின் வாட்ஸ் அப் எண் 9444042322 புகார் அளிக்கலாமென கலெக்டர் வினய் தெரிவித்துள்ளார்.

Categories: Dindigul, DISTRICT-NEWS

வியாபாரிகளுக்கு எச்சரிக்கை

31,May, 2018 Comments off

https://foodsafetynews.files.wordpress.com/2018/05/d1e77-2.jpg

Categories: NEWS

On World No Tobacco Day (India) Must Prioritize Tobacco Control to Protect Heart Health

31,May, 2018 Comments off

CHENNAI – For World No Tobacco Day – observed each year on May 31- Consumers Association of India is joining the World Health Organization (WHO)in calling on INDIA and countries around the world to prioritize tobacco control as a means for reducing heart and other cardiovascular diseases.

Cardiovascular diseases are the leading cause of death worldwide. Tobacco use contributes dramatically to these diseases as the second greatest contributing factor behind high blood pressure. Disproportionately, tobacco use harms some of the world’s most vulnerable populations as more than 80 percent of the world’s smokers live in low- and middle-income countries, where the harms of tobacco use are further exacerbated by a lack of access to health care.

Reducing tobacco use would have a dramatic effect on the death toll from cardiovascular diseases. Around the world, proven measures to reduce tobacco use have significantly reduced the health costs associated with tobacco. These measures include increasing tobacco taxes, placing large pictorial warning labels on tobacco products, restricting tobacco advertising and bans on smoking in indoor public places. Such policies are called for by the world’s first public health treaty, the WHO Framework Convention on Tobacco Control (WHO FCTC), which obligates its 180 parties to implement these proven policies to reduce tobacco use.

Consumers Association of India is conducting programmes on public education and disseminating them to the community level.

Tobacco kills in three main ways

1. Cancer of Lung, liver, oral cavity, throat, larynx, urinary bladder, Kidney, Pancreas & stomach, esophagus.

2. Cardio – Vascular Diseases (ischemic heart diseases, stroke) and

3. Respiratory Diseases (Chronic obstructive lung diseases, bronchitis, pneumonia)

This World No Tobacco Day, it’s time to put the heart health of our citizens first. Countries must implement the proven measures mandated by the WHO FCTC to reduce heart and other cardiovascular diseases, without urgent action, tobacco use will claim one billion lives this century.

NIRMALA DESIKAN
Chairman and Managing Trustee
Consumers Association of India & The CONCERT Trust
32, Kohinoor Complex
Vettuvankeni, Chennai 600115
Contact nos 9444253739 and 8124666285
Ph:   044 24494575/77
Fax: 044 24492140

E-mail: cai.india1@gmail.com

Categories: NEWS

கோவையில் 840 கிலோ குட்கா புகையிலைப் பொருள் பறிமுதல் விவகாரம்: 2 பேர் கைது

26,May, 2018 Comments off

கோவை: கோவையில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் கடத்தி வரப்பட்ட 840 கிலோ குட்கா புகையிலைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் ராஜவீதி பகுதியில் குட்கா புகையிலைப் பொருள் கடத்தப்பட உள்ளதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடத்தது. அதன் அடிப்படையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது வாகன நிறுத்தும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 சரக்கு வாகனங்களில் குட்கா புகையிலைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு வாகனத்தில் 600 கிலோ குட்காவும், மற்றொரு வாகனத்தில் 240 கிலோ குட்காவும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கூறுகையில், கைது செய்யப்பட்ட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் குற்றவாளிகள் 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர் என்று கூறியுள்ளார்.

Categories: Coimbatore, DISTRICT-NEWS

பாஸ்ட் புட் கடைகளில் தரமற்ற உணவு பொருள்

26,May, 2018 Comments off

சிவகாசி:மாலை நேர பாஸ்ட் புட் கடைகளில், நூடுல்ஸ் மற்றும் பிரைடு ரைஸ் தயாரிக்கும்போது, மலிவு விலை பொருட்கள் உபயோகிப்பதால், பல்வேறு உடல் நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைகிறது. மேலை நாட்டு உணவு பழக்க வழக்கங்கள், தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இரவு நேர உணவகங்களில் மக்கள் அதிகமாக, பாஸ்ட் புட் உணவுகளை உட்கொள்கின்றனர்.கலாசார மோகத்தால் துவங்கிய பழக்கத்துக்கு அடிமையாகும் மக்கள், காலப்போக்கில் கையில் பணம் குறைவாக உள்ளபோது, சாதாரண ரோட்டோர பாஸ்ட் புட் கடைகளுக்கு செல்கின்றனர். நூடூல்ஸ், பிரைடு ரைஸ், மஞ்சூ ரியன் வகைகள், சில்லிகள் தயாரிக்கும் கடைக்காரர்கள், சுவைக்காக மிளகாய், தக்காளி, சோயா சாஸ்கள், இஞ்சி, பூண்டு பேஸ்ட்டுகள், டேஸ்ட் மேக்கர் பவுடர், அஜினோமோட்டா ஆகியவற்றை உணவில் சேர்க்கின்றனர்.தங்களது கஸ்டமர்களை கவரும் வகையில், தரமான கம்பெனி பொருட்களை பயன்படுத்தும் கடைக்காரர்கள், அதன் பின், உள்ளூர் தயாரிப்புகள், மலிவு விலையில் கிடைக்கும் தயாரிப்புகளை வாங்கி உணவை தயாரிக்கின்றனர்.சிவகாசி நகரில், 90 சதவீதம் பாஸ்ட் புட் உணவங்கள், சில்லி சிக்கன் கடைகளில், இதுபோன்ற தரமற்ற மலிவு விலை தயாரிப்புகளை உபயோகிக்கின்றனர். விலை குறைவு, சுவை அதிகம் என ,மக்களும் இதுபோன்ற கடைகளை நாடிச்சென்று, சாப்பிட்டுவிட்டு குழந்தைகளையும், குடும்ப உறுப்பினர்களையும் சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர்.

அரசு மருத்துவர் ஒருவர் கூறியதாவது: பாஸ்ட் புட் உணவுகள், நமது உடல் நலனுக்கு ஒத்துவராத ஒன்றாகும். நூடூல்ஸ், பிரைடு ரைஸ் உணவுக்காக முட்டை கோஸ் பயன்படுத்துகின்றனர். முட்டைக்கோஸ் அறுவடை செய்தவுடன், புளு தாக்குதலில் இருந்து தடுக்க, சில்வர் நைட்ரேட் கரைசலில் முக்கிய எடுத்த பின் விற்பனைக்கு வருகிறது. உணவில் சேர்க்கும் முட்டை கோசை, கடைக்காரர்கள் கழுவு தில்லை. உள்ளூர் சாஸ் வகைகள் கெடாமல் இருக்க தேவைக்கும் கூடுதலாக வினிகரை சேர்க்கின்றனர். தயாரிப்பு, காலாவதி தேதியற்ற சாஸ், டேஸ்ட் மேக்கர், அஜினோ மோட்டா சுவைக்காக உணவில் சேர்ப்பதால், தொண்டையில் சதை வளர்வது துவங்கி, அலர்ஜி, குடல் புண், அல்சர் மற்றும், இறைப்பையில் கேன்சர் கட்டிகள் ஏற்படுகிறது.காய்கறி தவிர, கழுவப்படாத இறைச்சி, காலிப்பிளவர், காளான் ஆகியவற்றை நாள் முழுவதும் திறந்த வெளியில் வைத்து, எஞ்சியதை பிரிட்ஜில் வைத்து, மறுநாள் பயன்படுத்துகின்றனர். சில கடைகளில் காளானுக்கு பதிலாக மைதாமாவு கட்டியை வெயிலில் காய வைத்து உணவில் சேர்கின்றனர். கூடுதலாக சாஸ், பவுடர்களை சேர்த்து மறைப்பதால் வெளியே தெரிவதில்லை. நோய்களை ஏற்படுத்தும் இதுபோ ன்ற பொருட்கள் விற்பனை செய்வது தவறு. இதனாலே உணவு பாதுகாப்பு சட்டம் தேவை என அரசு வலியுறுத்துகிறது. அதிகாரிகள் நட வடிக்கை எடுத்து, இதுபோன்ற பொருட்களை பறிமுதல் செய்து, குழந்தைகளை நோயில் இருந்து மீட்கவேண்டும்.

Categories: NEWS

FSSAI revamps licensing and registration regulations

25,May, 2018 Comments off
 

In the recently-held meeting of the Central Advisory Committee, the apex food regulator of the country, has decided to review the regulations and restructure it in a way that would ensure more compliance form the FBOs. According to FSSAI’s review document, the proposed limit for registration under Food Safety and Standards Act, 2006, has been set at Rs 20 lakh, which is currently at Rs 12 lakh,which means now FBOs with a turnover of upto Rs 20 lakh require to only register with FSSAI.

Besides, the regulator has proposed to create three categories of licenses. While Level A (for FBOs whose turnover is between Rs 20 lakh and Rs 5 crore) and Level B (for FBOs whose turnover is between Rs 5 crore and Rs 75 crore) licenses will be issued by the state licensing authorities, the third category (Level C) is for FBOs whose turnover is over Rs 75 crore, and their licenses will be issued by the Central Licensing Authority.

Further, draft proposal pushes for the simplification of businesses as well, with seven categories, including manufacturing. The other kinds include storage, transport, trade, retail (both general and e-commerce), food services (both general and e-commerce) and imports.

The focus of FSSAI for some time has been to increase the level of compliance and awareness about the requisites under the regulations with regards of food safety ecosystem.

In the meeting it has been decided that the FSSAI headquarters shall be responsible for ensuring the compliance through a direct monitoring system on real-time basis, as all other FBOs’ premises will be linked with the head office for the purpose.

The document added that inspection shall take place once a year by the authority or third party. The proposal has stated that new licenses and registration will be issued to the FBOs for the remaining period of validity without any fees.

Categories: NEWS