Home > DISTRICT-NEWS, Tiruvannamalai > திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி எதிரில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை: அழுகிய பழங்களை கைப்பற்றி அழித்தனர்

திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி எதிரில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை: அழுகிய பழங்களை கைப்பற்றி அழித்தனர்

5,June, 2018

திருவண்ணாமலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவின்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கலைஷ்குமார்(நகரம்), சுப்பிரமணி(வட்டாரம்) ஆகியோர் நேற்று திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை எதிரில் உள்ள பழக்கடைகள், ஓட்டல்கள், டீக்கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 5 கிலோ எடையுள்ள அழுகிய பழங்களை கைப்பற்றி அழித்தனர். அதேபோல அங்குள்ள ஓட்டல்களில் ஆய்வு மேற்கொண்டு தரமான உணவு, குடிநீர் வழங்கப்படுகிறதா? என பார்வையிட்டனர். அப்போது பொதுமக்களுக்கு சுத்தமான தண்ணீர் வழங்க வேண்டும் என்றும், சமையல் செய்யும் இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.
டீக்கடைகளில் கலப்பட டீத்தூள் பயன்படுத்தக்கூடாது, காலாவதியான உணவு திண்பண்டங்களை விற்பனை செய்யக்கூடாது என்றும் தெரிவித்தனர். இந்த திடீர் ஆய்வினால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் கடைகள், ஓட்டல்கள், பழக்கடைகள், மாம்பழ மண்டிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். இவ்வாறு ஆய்வு செய்யும் அதிகாரிகள் கலப்பட டீத்தூளில் டீ விற்பனை செய்பவருக்கோ, கார்பைட் கற்கள் மூலம் பழுக்க வைத்த மாம்பழம் விற்பனை செய்பவர் மீதோ நடவடிக்கை எடுப்பதில்லை. சாம்பிளுக்கு மாம்பழத்தையோ, டீத்தூளையோ எடுத்து சோதனைக்காக சென்னைக்கு அனுப்பி விடுகின்றனர். தவறு செய்பவர்களுக்கு ஸ்பாட் பைன் விதிக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்்பினரின் கோரிக்கையாகும்.

%d bloggers like this: