Archive

Archive for 18,June, 2018

Ten Gurudwaras in Delhi implement FSSAI food safety guidelines for Langars

18,June, 2018 Comments off
 
The stricter set of food safety standards and hygiene have been put in place at all the 10 Gurudwaras where around one lakh devotees partake Langar, said Delhi Sikh Gurudwara Management Committee (DSGMC) president Manjit Singh.

Ten Gurudwaras in the national capital including the historical Bangla Sahib Gurudwara have implemented the food safety and hygiene standards set by food regulator FSSAI. The stricter set of food safety standards and hygiene have been put in place at all the 10 Gurudwaras where around one lakh devotees partake Langar, said Delhi Sikh Gurudwara Management Committee (DSGMC) president Manjit Singh. The Food Safety and Standards Authority of India (FSSAI) has initiated Project BHOG (Blissful Hygienic Offering to God) to encourage all places of worship in the country to adopt and maintain food safety and hygiene in the preparation of Prasad.

The project was among the Safe and Nutritious Food (SNF) bouquet of initiatives launched by the country’s apex food regulator last year. “DSGMC has surpassed the stringent targets set by Union Ministry of Health under FSSAI’s project BHOG to ensure that Sikh Sangat (visiting devotees) are served safe, hygienic and nutritious prasad at all the ten historic historic gurudwaras managed by it in national capital,” Singh claimed.

Around one Lakh devotees partake Prasad (Guru Ka Langar) in these Gurdwaras on week days and the number rises more than five Lakhs on weekend and festive occasions, he said. The management committee has set up food safety and hygiene standards for the community kitchens preparing Langar and Prasad with rules related with procurement of ingredients like ghee, vegetables, milk and grains.

Desi ghee and edible oils purchased by the committee for use in Langar are standardised and tested for purity in government labs. Payment to suppliers is made only after the lab reports are obtained, he said.

Vegetables are directly procured from Azadpur Mandi to ensure freshness and nutritional contents, while fortified staple items rice, flour and milk are procured to make prasad nutritious and wholesome, he said. Reverse osmosis (RO) plants have been set up to provide clean water for cooking to prevent contamination of food.

Apart from materials used, the training and adoption of hygienic practices by the food handlers is being closely monitored, Singh said.

All regular employees engaged in Langar kitchen are required to wear aprons, gloves and head covers. Certain items like chapatis are prepared using standard equipment without being touched by food handlers. All Langar premises are cleaned twice a day to ensure proper sanitation and hygiene standards, he said.

The management committee is in regular touch with civic agencies to ensure strict adherence to guidelines and directives for hygienic maintenance of Langar places. A non-profit group has been engaged by the committee for regular training and updating of the Langar employees and food handlers in matters relating to food safety and hygiene standards, Singh said. Workshops and training sessions are organised for the food handlers and vendors in Gurudwaras to sensitise them about the need for food safety regulations and health hygiene, he added.

Categories: NEWS

கலப்பட டீ தூள் விற்பனை… ஆய்வில் ‘சாயம்’ வெளுக்கிறது!

18,June, 2018 Comments off

கலப்பட பொருட்கள் என்பது தெரியாமலேயே, பல கடைக்காரர்கள் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் அதிர்ச்சி தகவல், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளது.
கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில், தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை, அதிகமாக நடப்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு, தொடர் புகார்கள் வந்தன. இதையடுத்து, கடந்த வாரம் துறை அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில், அதிரடி ஆய்வுகளை நடத்தினர்.
மாவட்டம் முழுவதும், 152 கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வில், 66.50 கிலோ கலப்பட டீ துாள், 42 கிலோ தடைசெய்யப்பட்ட உணவுப் பொருட்கள், காலாவதியான வாட்டர் பாக்கெட்கள், 30 லிட்டர் கைப்பற்றப்பட்டன. பல உணவு விற்பனையாளர்களுக்கும் தரமற்ற, கலப்பட உணவுப் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு இல்லாதது, அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத் துறை உணவுப்பிரிவு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறுகையில்,”பெரும்பாலான டீக்கடைகளில் கலப்படம் என்று தெரியாமலேயே, டீ துாளை பயன்படுத்தி வந்தனர். துாய்மையான நீர், சுத்தமான பொருட்கள் குறித்த விழிப்புணர்வு பலரிடம் இல்லை. ஒரு சிலர், கலப்படம் என தெரிந்தே பயன்படுத்தியுள்ளனர். தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும், ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளோம். பொதுமக்கள் காலாவதியான உணவுப் பொருட்கள் குறித்து, விழிப்புடன் இருக்க வேண்டும். உணவுப் பொருட்கள் வாங்கும் போது தயாரிப்பு, காலாவதி தேதி கவனித்து வாங்க வேண்டும். வியாபாரிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது,” என்றார்.
கலப்பட டீ துாள் கண்டறிவது எப்படி?
பாலில் கலக்கும்போது, நிறம் அதிகமாக கிடைக்க, டீ துாளில் ரசாயன நிறமிகள் அதிகம் கலக்கப்படுகின்றன. சாதாரண தண்ணீரில், டீ துாளை சிறிதளவு போடும்போது, நிறமிகள் தனியாக பிரிந்து, கலப்பட டீ துாள் தனியாக தெரியும். நிறமிகள் தண்ணீரின் விளிம்பில் வளையம் ஏற்படுத்தும். தரமான டீ துாள் மெதுவாக, தண்ணீரில் கீழிறங்கும். மரத்துாள் போன்ற பொருட்கள் கலந்திருந்தால், தண்ணீரில் தனியாக மிதக்கும்.

Categories: Coimbatore, DISTRICT-NEWS

உணவு பாதுகாப்புத்துறைக்கு கலெக்டர் உத்தரவு:திருப்பூரில் கலப்பட சமையல் எண்ணெய் விவகாரம்

18,June, 2018 Comments off

திருப்பூர் மாவட்டத்தில், 6,000 லிட்டர் கலப்பட சமையல் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டதன் எதிரொலியாக, மாவட்டம் முழுவதும் ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்க, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
பாமாயில் கலந்த, கலப்பட சமையல் எண்ணெய், பல்வேறு பெயர்களில் விற்பனை செய்யப்படுகிறது. கலப்பட எண்ணெய் பயன்பாட்டால், மக்களிடையே ஆரோக்கிய குறைபாடு ஏற்படுகிறது. பாமாயில் கலந்த எண்ணெய்யை, சமையல் எண்ணெய் என்ற பெயரில் விற்கலாம். ஆனால், கடலை எண்ணெய் என்று பெயரிட்டு விற்கக்கூடாது.
திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், நிலக்கடலை படத்துடன் தயாரித்த பாக்கெட்டில், பாமாயிலை, சமையல் எண்ணெய் என்ற பெயரில் விற்கின்றனர். எண்ணெய் பாக்கெட்டுகளிலும், அட்டை பெட்டிகளிலும், வேறு பெயரில் உரிமத்தை பதிவு செய்துவிட்டு, பாமாயில் கலந்த கலப்பட எண்ணெய் விற்கப்படுவதாக, மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த, நுகர்வோர் அமைப்புகளுடனான கலந்தாய்வு கூட்டத்தில், இதுதொடர்பான புகார் எழுந்தது. அன்றே, திருப்பூரில், கலப்பட எண்ணெய் தயாரித்த நிறுவனத்தில், 1,500 லிட்டர் கலப்பட எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. அடுத்த நாள், அவிநாசியில், 4,500 லிட்டர் கலப்பட எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.கலப்பட எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்கள் கண்டறியப்பட்ட பிறகு, உணவு பாதுகாப்புத்துறை உஷாராகியுள்ளது. மக்களின் பாதுகாப்பு நலன்கருதி, புகார் அடிப்படையில் மட்டும் ஆய்வு நடத்தாமல், தொடர்ந்து ஆய்வு நடத்த வேண்டும்.மாவட்டம் முழுவதும் உள்ள எண்ணெய் நிறுவனங்கள், தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டுமென, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் பழனிசாமி கூறுகையில்,”உணவு பாதுகாப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதன் விளைவாக, பொதுமக்களிடம் இருந்து அதிக அளவில் புகார் வருகிறது. புகார் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, இரண்டே நாட்களில், 6,000 லிட்டர் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.மாவட்டம் முழுவதும், இதேபோல் ஆய்வு நடத்தி, அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கலப்படம் செய்வது உறுதி செய்யப்பட்டால், உரிமத்தை ரத்து செய்து, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது,”என்றார்.

Categories: DISTRICT-NEWS, Tiruppur

மார்க்கெட், சாலையோர கடைகளில் கார்பைட் கற்கள் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்கள் விற்பனை

18,June, 2018 Comments off

புதுவையில் கார்பைட் கற்கள் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்கள் மார்க்கெட்டுகள் மற்றும் சாலையோர கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன இக்கடை களில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டிய உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்டும் காணாததுபோல் இருந்து வருகின்றனர்.  மாம்பழ சீசன் என்பதால் புதுச்சேரி பெரிய மார்க்கெட்டுக்கு உள்ளூர் மட்டுமல்லாது சேலம், காஞ்சிபுரம், திருவள்ளூவர் போன்ற பகுதிகளிலிருந்து டன் கணக்கில் மாம்பழங்கள் விற்பனைக்கு குவிந்துள்ளன. அதேபோல் முத்தியால்பேட்டை காந்தி வீதி, நூறடி சாலை, வழுதாவூர் சாலை, கோரிமேடு சாலை, கடலூர் சாலை ஆகிய பகுதிகளில் தள்ளுவண்டி மற்றும் மினி லோடு கேரியரில் மாம்பழங்கள் வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இதில் பங்கனப்பள்ளி ரூ.30, ஒட்டு ரூ.20, ருமேனியா ரூ.20, மல்கோவா ரூ.35, அல்போன்சா ரூ.30, காலபாடி ரூ.40, இமாம்பசந்த் ரூ.70 என மாம்பழங்கள் விற்பனை செய்யப்படு கின்றது. அவற்றை பொதுமக்கள் ஆசையுடன் வாங்கி செல்கின்றனர்.  இந்நிலையில், பெரிய மார்க்கெட் உள்ளிட்ட பல மார்க்கெட்டுகளில் இயற்கைக்கு மாறாக கார்பைட் கற்களை கொண்டு பழுக்க வைத்த மாம்பழங்கள் விற்கப்படுகிறது. இதையறியாமல் பொதுமக்கள் வாங்கி சென்று குழந்தைகளுக்கும் கொடுக்கின்றனர். இதனால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனை தடுக்க வேண்டிய உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்துடைப்புக்காக மட்டும் ஆய்வு செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
அந்த வகையில், கடந்த 1ம் தேதி பெரிய மார்க்கெட்டுக்கு சென்று பழ குடோன்களில் ஆய்வு செய்தனர். அப்போது கார்பைட் கற்களை கொண்டு பழுக்க வைத்திருந்த 500 கிலோ மாம்பழங்களை பறிமுதல் செய்தனர். அதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், 3 கூடை மாம்பழங்களை மட்டும் ஆய்வு செய்ய கொண்டு சென்றனர். மேலும், வாழைப்பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைப்பதற்கான டேக்போன்-39 என்ற ரசாயன மருந்து பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர், மாம்பழங்களை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட வியாபாரிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வியாபாரிகள் கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றனர். இதனால் பொதுமக்கள்தான் அதிகம் பாதிக்கப்
படுகின்றனர்.
பொதுவாக, ஏப்ரல் மாதம் துவங்கிய மாம்பழ சீசன் ஜூலை மாதத்தில் தான் முடியும். அதுவரை ஒட்டு, செந்தூரா, பங்கனப்பள்ளி, காலப்பாடி, மல்கோவா போன்ற மாம்பழங்கள் விற்பனை அமோகமாக நடைபெறும். இதுபோன்ற சூழலில் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் புதுவை முழுவதும் ஆய்வு செய்து தவறு செய்த வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், விவசாயிகள் யாரும் கார்பைட் கற்களை வைத்து மாம்பழங்களை பழுக்க வைப்பதில்லை. தோப்புகளை குத்தகைக்கு எடுக்கும் வியாபாரிகள், அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு, காய்கள் 100 சதவீதம் முதிர்ச்சி அடைவதற்கு முன்பாகவே, அதாவது 70 அல்லது 80 சதவீதம் அளவுக்கு மட்டுமே முதிர்ந்த காய்களை அறுவடை செய்து விடுகிறார்கள். இந்த காய்கள், இயற்கையாகவே பழுக்காது. அதனால்தான் கார்பைட் கற்களை வைத்து பழுக்க வைக்கிறார்கள். இதை சாப்பிடும் மனிதர்களுக்கு உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே, அதிகாரிகள் பாரபட்சமின்றி ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Categories: NEWS

ரூ.20 லட்சம் வரை ஜிஎஸ்டி செலுத்த தேவையில்லை என்பதால் உணவு பொருள் விற்போரின் உரிம கட்டணம் மாறுகிறது

18,June, 2018 Comments off

ரூ.20 லட்சம் வரை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) செலுத்தத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் உணவுப் பொருட்கள் விற்போரின் பதிவு சான்று அல்லது உரிமக் கட்டணத்தில் மாற்றம் வருகிறது.

உணவுப் பொருட்கள் விற்கும் சிறிய வியாபாரிகள் முதல் பெரிய வணிகர்கள் வரை பதிவுச் சான்று அல்லது உரிமம் வைத்திருப்பதை உணவுப் பாதுகாப்புத் துறை உறுதி செய்து வருகிறது. இதன்படி ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை உணவுப் பொருட்கள் விற்பனை செய்தால் அதற்கு ரூ.100 செலுத்தி பதிவுச் சான்று பெற வேண்டும். ரூ.12 லட்சத்துக்கு மேல் வணிகம் செய்தால் குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரம் செலுத்தி உரிமம் பெற வேண்டும். பதிவுச் சான்று அல்லது உரிமம் பெறுவதில் இருந்த குளறுபடிகள், நடைமுறைச் சிக்கல்களைக் களையும் வகையில், கடந்த ஜனவரி மாதம் முதல் பதிவுச் சான்று, அல்லது உரிமத்தை ஆன்-லைனில் விண்ணப்பித்து பெறும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, வியாபாரிகள் fssai (Food Safety And Standards Authority of India) இணையதளத்தில் நுழைந்து, அதில் Registration-ஐ கிளிக் செய்தால், அனைத்து மாநிலங்களின் பட்டியல் வரும். அதில் தமிழ்நாட்டை கிளிக் செய்து உள்ளே நுழைந்து பதிவுச் சான்று அல்லது உரிமத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஆன்-லைனில் பதிவு செய்ததும், அதிலுள்ள தகவல்களை சரிபார்க்கும்படி உணவுப் பாதுகாப்பு அதிகாரிக்கு மாவட்ட நியமன அலுவலர் உத்தரவிடுவார். சம்பந்தப்பட்ட இடத்துக்கு உணவுப் பாதுகாப்பு அதிகாரி சென்று ஆய்வு செய்து, மாவட்ட நியமன அலுவலருக்கு அறிக்கை அளிப்பார்.

அதையடுத்து குறிப்பிட்ட வியாபாரியின் மின்னஞ்சல் முகவரிக்கு பதிவுச் சான்று அல்லது உரிமம் அனுப்பி வைக்கப்படும். வியாபாரி தனது மின்னஞ்சலில் வந்த உரிமத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வாடிக்கையாளர்களின் கண்ணில் படும்படி கடையில் வைத்திருக்க வேண்டும் என்பது அரசு உத்தரவு.

இதுகுறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி பெ.அமுதா கூறும்போது, “தமிழ்நாட்டில் இதுவரை சிறிய வியாபாரிகளுக்கு 3 லட்சத்து 89 ஆயிரத்து 087 பதிவுச் சான்றுகளும், பெரிய வியாபாரிகளுக்கு 75 ஆயிரத்து 208 உரிமங்களும் வழங்கியுள்ளோம். இதுதவிர 10 லட்சம் பதிவு சான்று மற்றும் உரிமங்களை வழங்க வேண்டியுள்ளது. இதனிடையே, ரூ.20 லட்சம் வரை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) செலுத்தத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், குறிப்பிட்ட தொகை வரை உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் பதிவுச் சான்று அல்லது உரிமம் பெறுவதில் மாற்றம் செய்ய வேண்டும் என்று தமிழக வியாபாரிகள் சங்கத்தினர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதனால், அதுகுறித்து தமிழக அரசிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது. தமிழக அரசும் பரிசீலித்து வருகிறது. மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பிய பிறகு பதிவுச் சான்று மற்றும் உரிமம் பெறுவதற்கான கட்டண விகிதம் உள்ளிட்டவற்றில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.