Archive

Archive for 21,June, 2018

தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்புத் துறையில் 68சதவீத புகார்கள் மீது நடவடிக்கை

21,June, 2018 Comments off

தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்புத்துறைக்கு வந்த புகாரில் 68 சதவீத புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் அமுதா தெரிவித்தார்.  சேலம் ஜவ்வரிசி உற்பத்தி கண்காணிப்புக்குழு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு அரசு முதன்மை செயலாளர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் அமுதா தலைமை வகித்தார். கூட்டத்தில் சேலம் கலெக்டர் ரோகிணி, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மாரியப்பன் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலப்படமில்லாமல் ஜவ்வரிசி உற்பத்தி செயவது குறித்து ஆலை உரிமையாளர்களுக்கு ஆணையர் அமுதா அறிவுரை வழங்கினார். கூட்டத்திற்கு பின்னர் உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் அமுதா நிருபர்களிடம் கூறியதாவது:  சேலம் மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட ஜவ்வரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் இருந்து 29 மாநிலங்களுக்கு ஜவ்வரிசி அனுப்பப்படுகிறது. இந்த ஆலைகளில் மீறப்படும் தொழில் நெறிமுறைகளை களைவதற்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஜவ்வரிசியில் மக்காச்சோளம் கலப்பு இல்லாமல் தயாரிப்பது குறித்தும், தரமான ஜவ்வரிசி உற்பத்தி செய்வது குறித்தும், உரிமையாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. ஜவ்வரிசி ஆலைகளில் உள்ள குறைபாடுகளை களைவதற்கும் இதற்கென ஒரு வாரியம் அமைப்பது குறித்த ஆலோசனையை கலெக்டர் வழங்கினார். இது குறித்து அரசிடம் தெரியப்படுத்தப்படும். மரவள்ளி கிழங்கிற்கு உரியவிலை கிடைக்கவில்லை என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்தினால் மரவள்ளிக்கிழங்கு விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும். அதற்கான முயற்சியை அரசு மேற்கொள்ளும். இதுவரை உணவு கலப்படம் தொடர்பாக 2980 புகார்கள் வந்துள்ளன. இதில் 68 சதவீத புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தினமும் 20 புகார்கள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு வருகிறது. அதன் அடிப்படையில் உணவகங்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் உணவகங்கள் கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களை ஆய்வு செய்து, அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டு வந்த புகாரின் அடிப்படையில் 10 குடிநீர் ஆலைகளுக்கும், மூன்று உணவகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. எனவே, புகார் வந்தால் உடனடியாக உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அமுதா கூறினார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள் கூறுகையில், ‘சேலம் மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட ஜவ்வரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளை முடக்கும் நோக்கத்தில், சில ஜவ்வரிசி உரிமையாளர் சங்க நிர்வாகிகள், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கைக்கோர்த்துள்ளனர். சோதனை என்ற பெயரில் நுழைந்து இயந்திரங்களை பறிமுதல் செய்வது, ஜவ்வரிசியை பறிமுதல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிடம் புகார் அளித்தோம்,’ என்றனர்.

Categories: NEWS

திருகோவிளலூரில் 2 டன் மாம்பழங்கள் பறிமுதல்

21,June, 2018 Comments off

tkr paper newstkr paper news-01

Categories: DISTRICT-NEWS, Villupuram

டீத்தூளில் கலப்படம் : நிறுவனத்திற்கு, ‘சீல்’

21,June, 2018 Comments off

அரும்பாக்கத்தில் உள்ள, டீ துாள் விற்பனை நிறுவனத்தில் இருந்து, கலப்படம் செய்யப்பட்ட, 35 டன் டீத்துளை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.அரும்பாக்கம், செந்தில் நகர், 2வது தெருவில், தாமஸ் என்பவருக்கு சொந்தமான, தனியார் டீ துாள் விற்பனை நிறுவனம் உள்ளது. கோவையில் இருந்து வரும் டீ துாளை, ‘பேக்’ செய்து, சென்னையில் விற்பனை செய்து வந்தார்.உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கதிரவன் தலைமையிலான அதிகாரிகள், நேற்று இரவு, அந்நிறுவனத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.இதில், டீ துாளில் சேர்க்க வைத்திருந்த, 300 கிலோ சாயம் மற்றும் கலப்படம் செய்யப்பட்ட, 35 டன் டீத்துாள் ஆகியவற்றை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், அந்த நிறுவனத்திற்கு, அதிகாரிகள், ‘சீல்’ வைத்தனர்.மேலும், அந்த கலப்பட டீத்துார் மாதிரியை, தஞ்சாவூரில் உள்ள சோதனை சாவடிக்கு அனுப்பி வைத்தனர்.

Categories: Chennai, DISTRICT-NEWS