Archive

Archive for 3,September, 2018

பிரபல பிரியாணி கடையில் வாங்கிய பிரியாணியில் புழு: வாடிக்கையாளர் ட்விட்டரில் புகார்; அபராதம் விதித்த அதிகாரிகள்..!!

3,September, 2018 Comments off

ஆயிரம் பேர் அமர கூடிய மிக பெரிய கடையில் வாங்கிய பிரியாணியில் புழு இருந்தது என வாடிக்கையாளர் புகார் தெரிவித்துள்ளார்.

ஆயிரம் பேர் அமர கூடிய மிக பெரிய கடையில் வாங்கிய பிரியாணியில் புழு இருந்தது என வாடிக்கையாளர் புகார் தெரிவித்துள்ளார். 
சுவீடன் நாட்டை சார்ந்த ஐ.கே.ஈ.ஏ. என்ற பர்னிச்சர் நிறுவனம், இந்தியாவில் முதல் முறையாக ஐதராபாத் நகரில் பிரியாணி கடை ஒன்றை தொடங்கியது. இந்த ஓட்டலில் 1000 பேர் அமர கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சுவீடன் மற்றும் இந்திய உணவு வகைகள் அனைத்தும் கிடைக்கும்.

கடந்த 3 வாரங்களுக்கு முன் இந்த கடையில் பிரியாணியை, வாடிக்கையாளர்கள் வரிசையில் நின்று  வாங்கி சென்றனர்.

ஆனால், கடந்த சில திங்களுக்கு முன் அபீத் முகமது என்ற வாடிக்கையாளர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில்"  தான் வாங்கிய வெஜிடபிள் பிரியாணியில் கூட்டுப்புழு ஒன்று கிடந்தது என புகைப்படம் வெளியிட்டு புகாராக பதிவிட்டுள்ளார்.

அவர், அந்த பதிவில் தெலுங்கானா நகராட்சி, நகர் வளர்ச்சி துறை மந்திரி ராமாராவ் மற்றும் ஐ.கே.ஈ.ஏ. ஐதராபாத் நிறுவனம் ஐதராபாத் காவல் துறை ஆகியவற்றை ட்விட்டர் பக்கத்தில் டேக்  செய்துள்ளார்.

இதையடுத்து, வாடிக்கையாளர்கள் பலர் பிரியாணி நிறுவனத்திற்கு ட்விட்டர் வழியே கண்டனம்  தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், அந்த பிரியாணி நிறுவனத்திற்கு ₹.11500 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.   மேலும், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அங்கு சென்று, உணவு பொருட்களில் சிலவற்றை ஆய்வுக்காக எடுத்து சென்றுள்ளனர்.

Categories: NEWS

உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

3,September, 2018 Comments off

சத்துணவு அமைப்பாளர்களுக்கான உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் தருமபுரியில் சனிக்கிழமை நடைபெற்றது. 
வட்டார வளர்ச்சி அலுவலர் உ.கெளரி தலைமை வகித்தார். உணவு பாதுகாப்பு அலுவலர் கே.நந்தகோபால், உணவு பாதுகாப்பு மற்றும் நெகிழி பயன்பாட்டை தவிர்க்க வேண்டியதன் அவசியம் குறித்து பேசினார். இதில், சத்துணவு மையத்தை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும். சமைக்கும் பாத்திரங்கள் தூய்மையாகவும், கழிவுப்பொருள்கள் முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினர்.
மேலும்,  உணவு பொருள்கள் காலாவதி தன்மை அறிந்து முதலில் வரும் பொருளை முதலில் உபயோகப்படுத்தல் வேண்டும். உணவு பொருள்கள் சேமிப்பு அறைகளில் கரப்பான் பூச்சி மற்றும் எலிகள் நுழையாத வகையில் வலைகள் அமைக்க வேண்டும். குடிநீர் அருந்துவதற்கு காய்ச்சி வடிகட்டிய நீர் அளிக்க வேண்டும். 
நெகிழிப் பயன்பாட்டை முற்றிலும் தவிர்ப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா மற்றும் தருமபுரி ஒன்றியத்துக்குள்பட்ட சத்துணவு அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

கேன் குடிநீரின் தரத்தை அறிய தனி இணையதளம்: தமிழகத்தில் இதுவரை 1,016 நிறுவனங்கள் பதிவு

3,September, 2018 Comments off

கேன்கள், பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரின் தரத்தை பொதுமக்களே நேரடியாக அறிந்துகொள்ள தொடங்கப்பட்டுள்ள இணையதளத்தில் தமிழகத்தில் இதுவரை 1,016 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன.

தமிழகத்தில் குடிநீர் கேன்கள் விற்பனை மிகப்பெரிய வர்த்தகமாக மாறியுள்ளது. பெரும்பாலான குடிநீர் நிறுவனங்கள் நிலத்தடி நீரைத்தான் முக்கிய நீர் ஆதாரமாக கொண்டுள்ளன. அளவுக்கு அதிகமான காப்பர், இரும்பு, அலுமினியம், குளோரைடு போன்றவற்றால் தரம் பாதிக்கப்பட்ட குடி நீரைப் பருகினால், வாந்தி, உயர் ரத்த அழுத்தம், முடக்குவாதம், இதயம், கிட்னி, எலும்பு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும். எனினும், லாபம் ஒன்றையே நோக்கமாக கொண்டு செயல்படும் சிலர், குடிநீரின் தரத்தைப் பற்றி கவலைப்படாமல் மக்களின் தேவையை பயன்படுத்தி காசு பார்க்கின்ற னர். பல இடங்களில் முறையான உரிமம் பெறாமல் தரமற்ற குடிநீர் கேன்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் புகார்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் நுகர்வோரிடையே நம்பிக்கையையும், வெளிப்படைத்தன்மை யும் ஏற்படுத்தும் வகையில், குடிநீரின் தரத்தை பொதுமக்கள் நேரடியாக தெரிந்து கொள்ளும் வகையில் இந்திய உணவு பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) சார்பில் http://www.safewater. fssai.gov.in என்ற தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணைய தளத்தில் குடிநீர் பாட்டில்கள், பாக்கெட்டுகள், 20 லிட்டர் கேன்களில் அடைக்கப்பட்ட குடிநீரை விற்பனை செய்யும் நிறுவனங்கள் தங்கள் நிறுவனம் குறித்த விவரங்களைப் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

இதுதொடர்பாக மாநில உணவு பாதுகாப்புத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தமிழகத்தில் மட்டும் உணவு பாதுகாப்பு உரிமம் (FSSAI Licence) பெற்ற 1,319 கேன் குடிநீர் நிறுவனங்கள் உள்ளன. அவற்றில், ஜூலை மாதம் வரை மொத்தம் 1,016 நிறுவனங்கள் இணையதளத்தில் தங்கள் விவரங்களைப் பதிவு செய்துள்ளன. எஞ்சியுள்ள நிறவனங்களும் பதிவு செய்ய இந்திய உணவு பாதுகாப்புத் துறை ஆணை யம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, அனைத்து மாவட்டங்களில் உள்ள உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் குடிநீர் நிறுவன உரிமையாளர்களிடம் இணையதளத் தில் பதிவு செய்வதன் அவசியத்தை எடுத்துரைத்து வருகின்றனர்.

அறிந்துகொள்வது எப்படி?

http://www.safewater.fssai.gov.in என்ற இணைய தளத்தில் இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்) மூலம் வழங்கப்படும் 7 இலக்க உரிம எண் BIS number (CM/L:XXXXXXX என்று கேன்கள், பாட்டில் களின் மேல் அச்சிடப்பட்டிருக்கும்) அல்லது உணவு பாதுகாப்பு உரிம எண் (FSSAI Licence number) ஆகியவற் றில் ஏதேனும் ஒன்றை பதிவிட்டால், சம்பந்தபட்ட நிறுவனத்தின் குடிநீர் தரமானதா என்பது குறித்து ஆய்வுகூடத்தால் அளிக்கப்பட்ட சான்றை பொதுமக்களே நேரடியாக பார்வையிட்டு தெரிந்துகொள்ள லாம். இந்திய உணவு பாதுகாப்பு ஆணையத் தால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வு கூடத்தில் குடிநீரை பரிசோதித்து 6 மாதங்களுக்கு ஒருமுறை இந்த சான்றை நிறுவனங்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

புகார் அளிக்கலாம்

நுகர்வோர் ஒவ்வொரு முறையும் குடிநீர் கேன்களை வாங்கும்போது அவை நன்றாக சீல் செய்யப்பட்டு கசிவின்றி இருக்கிறதா, பேக்கிங் செய்யப்பட்ட தேதி அச்சிடப்பட்டு உள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும். அவ்வாறு இல்லாமல், தரமற்ற குடிநீரை விற்பனை செய்வது தெரியவந்தால் 9444042322 என்ற எண்ணில் மாநில உணவு பாதுகாப்புத் துறையைத் தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

உணவு தரத்துக்கு உத்தரவாதம் இல்லை!

3,September, 2018 Comments off

ஓட்டல், சிற்றுண்டி கடைகளில், சுகாதாரம் இல்லாத உணவுகள் விற்கப்படுவது, வாடிக்கையாளர்களை அதிருப்தியடைய செய்திருக்கிறது. பின்னலாடை தொழில் நகரான திருப்பூரில், தினசரி, ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். உள்ளூர் மக்கள் மட்டுமன்றி, வர்த்தகம் சார்ந்து, வெளியூரில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.இதனால், நகரில் உள்ள ஓட்டல், சிற்றுண்டி கடைகளில், மக்கள் கூட்டம் அதி கமாக இருக்கும். ஆனால், பல ஓட்டல்களில் சுத்தம், சுகாதாரம் இல்லை என, பொதுமக்கள் புலம்புகின்ற னர். குறிப்பாக, ரோட்டோரம் உள்ள சிற்றுண்டிக் கடைகளின் சுற்றுப்புறம், சுத்தமாக இல்லை, என்பது மக்களின் பிரதான குற்றச்சாட்டு.இதுதான் விதி!உணவு பாதுகாப்புத்துறையின் தர நிர்ணய சட்டம், 2006ன் கீழ் உள்ள, குறிப்பிட்ட, 12 விதிகளுக்குட்பட்டே உரிமம் வழங்கப்படுகிறது. அதன்படி, ஓட்டல் உரிமையாளர்கள், தங்களிடம் பணிபுரியும் ஊழியர்களுக்கு, ஆண்டுக்கொரு முறை, கண்டிப்பாக மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தொற்று நோய், வெட்டுக்காயம் உள்ளவர்களை உணவு தயாரிப்பு தொடர்பான பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது.உணவு தயாரிக்க, சுத்தமான பாத்திரத்தை பயன் படுத்த வேண்டும். கீற்றுக் கொட்டகை மற்றும் பிற உயிரினம் வசிக்கும் நிலையில், சமையல் கூடம் இருக்கக்கூடாது என்பது உட்பட விதிகள் உள்ளன. ஆனால், திருப்பூர், சுற்றுப்புற பகுதிகளில், பல ஓட்டல், சிற்றுண்டிக் கடைகளில், இவ்விதி கடைபிடிக்கப்படுவது இல்லை.சுகாதாரம் இல்லைபல ஓட்டல்களில், சுகாதாரம் பேணுவதில்லை; ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படு வதும் இல்லை. உரிமம் பெறாத, விதிமீறும் ஓட் டல், சிற்றுண்டிக் கடைகள் மீது, நடவடிக்கை எடுக்க, உணவு பாதுகாப்பு சட்டம் வழிவகை செய்துள்ள போதிலும், அதைப்பற்றி அதிகாரிகள் கண்டுக்கொள் வதில்லை. இதனால், ஓட்டல்களில் உணவு உட்கொள்ளும் பலர் உடல் உபாதையால் பாதிக்கின்றனர்.இதுகுறித்து, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் கூறியதாவது;உணவு பாதுகாப்புத் துறையின், பதிவு மற்றும் உரிமம் பெற்ற பின்னரே, ஓட்டல் நடத்த வேண்டும். இதுகுறித்து, அவ்வப்போது, ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் இடையே, விழிப்புணர்வு கூட்டம் நடத்தி, சுகாதாரம் பேண அறிவுறுத்தி வருகிறோம்.ஆனால், இச்சங்கத்தில், சிறிய ஓட்டல், சிற்றுண்டிக் கடைகள் இணையாததால், அவர்களை ஒருங்கிணைக்க முடிவதில்லை.உணவு தயாரிப்பில் குறை இருப்பது தெரிந்தால், ‘94440 42322’ என்ற ‘வாட்ஸ் ஆப்’ எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., அல்லது வீடியோ பதிவு அனுப்பினால், 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Categories: DISTRICT-NEWS, Tiruppur

பதப்படுத்திய உணவு

3,September, 2018 Comments off

இன்றைக்கும் குளிர்பதன வசதி இல்லாமல் நீண்ட நாட்களுக்கு உணவுப்பொருட்களை பாதுகாத்து வைக்கும் ஆற்றலை இயற்கை ஏற்படுத்தி தந்துள்ளது.

உணவைப் பதப்படுத்துதல் நாகரிக வளர்ச்சி என்று நினைக்கலாம். ஆனால், போர்கள் நிறைந்த 18-ம் நூற்றாண்டில் பதப்படுத்தப்பட்ட உணவை அனைவரும் வைத்திருக்க வேண்டும் என்று ராணுவ அதிகாரிகள் வலியுறுத்தியதற்கு காரணம் இருக்கிறது. எதிரிகளைவிட, உணவே பல தோல்விகளை வரவழைத்திருக்கிறது. இன்றைக்கும் குளிர்பதன வசதி இல்லாமல் நீண்ட நாட்களுக்கு உணவுப்பொருட்களை பாதுகாத்து வைக்கும் ஆற்றலை இயற்கை ஏற்படுத்தி தந்துள்ளது. மனித பேரழிவுகளின்போது மனிதர்கள் தாக்குப்பிடித்து உயிர்வாழ பதப்படுத்துதல் உதவுகிறது.
18-ம் நூற்றாண்டின் இறுதியில்தான் தகரக்குவளையில் உணவை அடைத்துப்பதப்படுத்தும் முறை கண்டறியப்பட்டது. மாவீரன் நெப்போலியனின் ராணுவத்தினர் போரில் சண்டையிட்டு இறந்ததைவிட, பசி, ஊட்டச்சத்து குறைபாட்டால் அதிக அளவில் இறந்தனர். வைட்டமின் சி குறைபாட்டால் ஸ்கர்வி நோய் தாக்கியதால் பாதிக்கப்பட்டனர். புண்கள் ஏற்படுதல், மஞ்சள்காமாலை, காய்ச்சல், நரம்புக் கோளாறு, இறப்பு போன்றவற்றை அது ஏற்படுத்தக்கூடும்.
அப்போது பிரெஞ்சு அரசாங்கம், ராணுவ வீரர்களுக்காக உணவைப் பதப்படுத்தும் முறையை கண்டறிபவர்களுக்கு பெரும் பரிசு அளிப்பதாக அறிவித்தது. நிகோலஸ் அப்பெர்ட் என்பவர், பாதி சமைக்கப்பட்ட உணவை இதற்குத் தீர்வாகப் பயன்படுத்தலாம் என்று தெரிவித்தார். மிட்டாய் செய்பவர், சமையல் கலை வல்லுனர், பீர் தயாரிப்பவர் என பல்வேறு அனுபவங்களை பெற்றிருந்தார்.
உணவை பாட்டில்களில் சேமித்து, அவற்றின் உள்ளே உள்ள காற்றை வெளியேற்ற கொதிக்கும் தண்ணீரில் போட்டார். ஏனென்றால், காற்றுதான் உணவைக் கெட்டுப் போகச் செய்கிறது என்று அவர் நம்பினார். பிரெஞ்சு ராணுவ வீரர்கள் வெளிநாட்டுக்குப் போனபோது, அப்பெர்ட் பதப்படுத்திய கோழி, காய்கறி, குழம்பு மாதிரிகளை எடுத்துச் சென்றனர். நான்கு மாதங்களுக்குப் பிறகும் அவை சாப்பிடக்கூடியதாக இருந்தன என்று தெரிவித்தனர். இப்படியாக உணவைப் பதப்படுத்தும் செயல்பாடு, ராணுவ தேவைகளுக்காகவே முதலில் கண்டறியப்பட்டது.
ஆனால், கொதிக்கும் தண்ணீரில் உள்ள வெப்பம் காற்றை நீக்குவதற்கு பதிலாக, நுண்ணுயிரிகளை அழித்துவிடுகிறது என்பதை அரை நூற்றாண்டுக்கு பிறகே லூயி பாஸ்சர் என்பவர் கண்டுபிடித்தார். நுண்ணுயிரிகளே உணவை கெட்டுப் போக வைத்தன, நோய்களை உருவாக்குகின்றன என்று அவர் கண்டுபிடித்தார். அது மட்டுமல்லாமல் நம் நாட்டு பதப்படுத்தும் முறையான வற்றல், ஊறுகாய் போன்றவை சுற்றுச்சூழலை சீர்கெடுக்காமல், சூரிய சக்தியின் மூலமே பொருட்கள் பதப்படுத்தப்பட்டன. இதுவும் ஒரு சிறந்த பதப்படுத்தும் முறை என்பதே உண்மை. 

Categories: NEWS

FSSAI exempts makers of iodised salt from declaring +F logo on labels

3,September, 2018 Comments off

Food business operators (FBOs) manufacturing iodised salt have been exempted from declaring the fortification logo (+F) on their product label. In its recent directive, FSSAI clarified that the declaration was not required, as iodised salt had already been fortified with iodine.
Recently, the country’s apex food regulator notified the Food Fortification Regulations, 2018, with which the FBOs need to comply by January 2019.
As per the Food Safety and Standards (Fortification of Foods) Regulations, 2018, the +F logo must be displayed on the labels of fortified foods so as to promote the voluntary fortification of food products. They state that every package of fortified food shall carry the words ‘fortified with ………… (name of the fortificant)’ and the logo.
However, the regulations added, “Common salt used for direct consumption cannot be sold or offered in the market for sale without iodisation. Since 2005, iodisation of salt has become mandatory, and thus, common salt does not require any such promotion or identity as being fortified.
Another reason the apex regulator has taken into account for giving the exemption is to differentiate between iodised salt and double-fortified salt. As per the mandate, only iodised salt which contains iron can be sold to consumer. According to the fortification standards, double-fortified salt is fortified with both iodine and iron, where they are combined.
As per FSSAI, if only iodine is used as fortification, there is no need to display the +F logo, as iodisation is mandatory. However, double-fortified salt will carry the +F log on the label.
Sonal Dhemla, research scholar, department of home science, University of Rajasthan, said, “The suggested +F logo indicates the addition of extra nutrients in the particular product.”
“It is generally the staple foods, i e wheat flour, milk, oil, salt, etc., that are being fortified, as they are consumed on daily basis,” she added.
“The recent FSSAI move of exempting the salt from carrying the +F logo, would be a good decision, as consumers can easily distinguish the iodised salt and salt with other fortificants like iron, and thus can purchase the salt of their choice,” Dhemla said.
“If we talk about exemption of logo from salt, consumers in the country have become habituated to and familiar with the iodised salt packaging and can recognise it very easily,” he added.
Standards on natural spring water
Meanwhile, FSSAI has issued new standards on natural spring water. The apex regulator, through a gazette notification, has notified this category.
Under the regulation relating to Beverages (Other than Dairy and Fruits and Vegetables based), the sub-regulation relating to mineral water, a new clause on natural spring water has been added. Previously, there were no standards for natural spring water.
As per the gazette, “Natural spring water is defined as water which has been derived from an underground formation from which water flows naturally to the surface of the earth at an identified location.”
It added, “Spring water shall be collected only at the spring or through a borehole tapping the underground formation feeding the spring. There shall be a natural force causing the water to flow to the surface through an orifice.”
Further, it is mentioned that the product shall conform to the standards for mineral water as specified in the regulation with regard to microbiological requirements, organoleptic and physical parameters, general parameters concerning substances undesirable in excessive amounts, parameters concerning toxic substance, radio-active residues and pesticide residues.
However, the total dissolved solids (TDS) content for natural spring water will be different and   should be not more than 750mg/litre.
The draft for the proposed amendment was published on October 12, 2017, and were put for suggestions.
After taking these into consideration, FSSAI has amended the additives regulations. The notified regulation would be termed as Food Safety and Standard (Food Products Standards and Food Additives) Eighth Amendment Regulations, 2018.

Categories: NEWS