Home > DISTRICT-NEWS, Villupuram > மரக்கானம் உப்பு உற்பத்தி பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிரடி ஆய்வு.போலி முகவரியிட்ட உப்பு பாக்கெட் செய்ய ,விற்பனைக்கு அனுப்ப தடை.

மரக்கானம் உப்பு உற்பத்தி பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிரடி ஆய்வு.போலி முகவரியிட்ட உப்பு பாக்கெட் செய்ய ,விற்பனைக்கு அனுப்ப தடை.

22,March, 2019

93c997b0-bf1f-4c62-8ef2-37f46ebaadc0c6c2e611-dfc4-48b0-8a4f-9b316490abbaஉலக நுகர்வோர் தினத்தையொட்டி உணவு பாதுகாப்பு துறை மற்றும் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராச்சி மையம் இணைந்து எங்கும், எதிலும் தரம் என்ற கோட்பாட்டின் படி உணவுக்கான உப்பில் அயோடின் அளவு குறித்து உப்பு உற்பத்தி செய்யும் இடத்தில் ஆய்வக பரிசோதனை செய்து அதன் மூலம் உப்பின் தரத்தை மேம்படுத்த உதவும் அலோசனை மற்றும் குறைபாடுகளை களைய நடவடிக்கையை மாநில உணவு பாதுகாப்பு துறை ஆணையரின் உத்திரவின் படி விழுப்புரம் மாவட்டம்  மரக்காணம் உப்பள பகுதியில் திடிர் ஆய்வு மேற்கொண்டனர் .இந்த ஆய்வின் போது மரக்காணம் பகுதியில் உப்பு உற்பத்தியாளர் களிடம் அயோடீன் அளவு மற்றும் தரம் குறித்து உணவுபாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தட்சிணாமூர்த்தி கேட்டறிந்து அயோடின் நுன்சத்து கலக்காமல் விற்பனை க்கு அனுப்பகூடாது எனவும்.FSSAI license எண் பொட்டலத்தில் அச்சிட்டு விற்பனை செய்ய அறிவுரை வழங்கினார்..விற்பனை க்கு தயாராக இருந்த உப்பு மூட்டைகளை அயோடின் பரிசோதித்து அது குறித்து உணவு பாதுகாப்பு அலுவலரக்கு் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தலும்.உரிய நடவடிக்கை எடுக்க வழிகாட்டலும் வழங்கப்பட்டது. இவ் ஆய்வின் போது உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குணசேகரன்,பத்பநாபன் மற்றும் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் .திருநாவுக்கரசு விழுப்புரம் நுகர்வோர் சங்க துணைத்தலைவர் செந்தில் ஆகியோர் உடன் இருந்தனர்.

Categories: DISTRICT-NEWS, Villupuram
%d bloggers like this: