Home > DISTRICT-NEWS, Kancheepuram > தமிழகத்தின் முதல் ஆரோக்கிய உணவு வளாகம், ‘ஹூண்டாய்’

தமிழகத்தின் முதல் ஆரோக்கிய உணவு வளாகம், ‘ஹூண்டாய்’

4,January, 2020

 தமிழகத்தின் முதல் ஆரோக்கிய உணவு வளாகம், 'ஹூண்டாய்'

தமிழகத்தின், முதல் ஆரோக்கிய உணவு வளாகமாக, ‘ஹூண்டாய் மோட்டார்’ நிறுவனத்தை, உணவு பாதுகாப்பு ஆணையம் அறிவித்து, ‘5 ஸ்டார்’ மதிப்பீடு செய்யப்பட்ட சான்று வழங்கியுள்ளது.
புதுடில்லி உணவு பாதுகாப்பு மற்றும் ஆணையகம், ஆரோக்கியமான உணவு வளாகம் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.இத்திட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில் இயங்கும், ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தை ஆரோக்கியமான உணவு வளாகமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் அடிப்படையில், அங்கிருப்போருக்கு பல்வேறு பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
அந்நிறுவனத்தில், தினமும், 28 ஆயிரம் பணியாளர்களுக்கு, தனியார் நிறுவனம் மூலம் உணவு பரிமாறப்பட்டு வருகிறது.இந்நிலையில், ஹூண்டாய் நிறுவனத்தில் பரிமாறப்படும் உணவுகள் தணிக்கை செய்யப்பட்டு, ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டன.அதன் அடிப்படையில், தமிழகத்தில், முதல் ஆரோக்கிய உணவு வளாகமாக, ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தை, உணவு பாதுகாப்பு ஆணையம் அறிவித்து, 5 ஸ்டார் மதிப்பீடு செய்யப்பட்ட சான்றை, மத்திய சுகாதார துறை அமைச்சர், ஹூண்டாய் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளார்.
மத்திய அமைச்சரிடம் பெறப்பட்ட சான்றிதழை, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையாவிடம், காண்பித்து, அந்நிறுவன அதிகாரிகள், வாழ்த்து பெற்றனர்.உடன், காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அனுராதா இருந்தார்.

%d bloggers like this: