Home > NEWS > சாப்பாடு முக்கியம் பாஸ்! அது தரமாக இருப்பது ரொம்ப முக்கியம்:உறுதிப்படுத்த வருகிறது புது திட்டங்கள்

சாப்பாடு முக்கியம் பாஸ்! அது தரமாக இருப்பது ரொம்ப முக்கியம்:உறுதிப்படுத்த வருகிறது புது திட்டங்கள்

14,December, 2020

உணவு பொருட்களில் கலப்படம், வீதியோர கடைகளில் சமையலுக்கு பழைய எண்ணெய் பயன்படுத்துவது, கெட்டுப்போன இறைச்சியை பிரியாணிக்கு பயன்படுத்துவது…
இப்படி உணவு கலப்படம் தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க களம் இறங்கியுள்ளது, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை.கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் கீழ், மாவட்ட வழிகாட்டுதல் குழு கூட்டம், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.இக்கூட்டத்தில், உரிமம் பதிவு, ‘ஈட் ரைட் சேலஞ்ச்’ திட்டத்தின் கீழ், கோவை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பணிகள் குறித்து, அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் தமிழ்செல்வன் கூறியதாவது:மாவட்டத்தில் உணவு பாதுகாப்பை உறுதி செய்ய, அனைத்து தரப்பிலும் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து ஓவிய போட்டிகள் நடத்தப்படவுள்ளன. கோவையில் உள்ள அனைத்து நட்சத்திர உணவகம், பேக்கரிகள், ரெஸ்டாரன்ட்களுக்கு சுகாதார தரச்சான்றிதழ் வழங்க, ஆய்வுகள் துவங்கவுள்ளன.
உணவகங்களில் மீதமாகும் பயன்படுத்திய எண்ணெய், அரசால் நியமிக்கப்பட்ட முகவர்களுக்கு கொடுத்து, மறு சுழற்சியில் பயோ எரிபொருளாக மாற்ற முறையாக விற்பனை செய்வது, கோவில்களுக்கு தரச்சான்று என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த, பணிகள் நடந்து வருகின்றன.’கிளீன் ஸ்டிரீட் புட் ஹப்’ திட்டத்தின் கீழ், சரவணம்பட்டி பகுதியில் 112 கடைகள் உணவு பாதுகாப்பு துறை மூலம் ஆய்வு செய்து, கிளீன் ஸ்டிரீட் புட் ஹப் என்று அறிவிக்கும் நிலையில் உள்ளன.உணவு வணிகர்களுக்கு பயிற்சிசுகாதாரமான உணவை விற்பனை செய்ய உணவு வணிகர்கள், ‘பயிற்சி மற்றும் சான்றிதழ்’ பயிற்சியில் பங்கேற்று, ‘எப்.எஸ்.எஸ்.,’ சான்றிதழ் பெறவேண்டியது அவசியம்.
ஈட் ரைட் கேம்ஸ்பள்ளி, கல்லுாரி, அங்கன்வாடி மையம், மருத்துவ மனைகள் மற்றும் சிறைச் சாலைகள் ஈட் ரைட் கேம்பஸ் சான்றிதழ் பெறவேண்டியது அவசியம். இதற்காக கோவையில், 25 பள்ளிகள் உட்பட 119 கல்வி நிறுவனங்கள் இலக்காக வைக்கப்பட்டுள்ளன. பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் விழிப்புணர்வுக்காக, புதிய பக்கங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன.
செவிலியர்களுக்கு பயிற்சிநம் வாழ்வில் அன்றாடும் பயன்படுத்தப்படும் உணவு பொருட்களில், கலப்படம் உள்ளதா என்பதை எளிதாக அறிய, பொது சுகாதாரத்துறையுடன் இணைந்து செவிலியர், பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது.இவ்வாறு, தமிழ்செல்வன் கூறினார்.
கோவையில், 2019-20 முதல் 2020 நவ., மாதம் வரை, 1120 உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. விதிமீறல் காரணமாக, 348 சிவில் வழக்குகள், 274 கிரிமினல் வழக்குகளாக பதிவு செய்யப்பட்டு, அபராதம், சிறை தண்டனை வரை வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.- தமிழ்செல்வன்உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்

Categories: NEWS
%d bloggers like this: