Home > NEWS > கோயம்பேடு பஸ் நிலையத்தில் உணவு பாதுகாப்பு துறை ஆய்வு

கோயம்பேடு பஸ் நிலையத்தில் உணவு பாதுகாப்பு துறை ஆய்வு

26,December, 2020

கோயம்பேடு; கோயம்பேடு பஸ் நிலையத்தில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில், தரமற்ற உணவு விற்பனை செய்யப்பட்டு வருவது கண்டறியப்பட்டது.கோயம்பேடு பஸ் நிலையத்தில், 40க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன.அவற்றில், தரமற்ற உணவு விற்பனை செய்யப்பட்டு வருவதாக, சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ராமகிருஷ்ணனுக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, நேற்று உணவு பாதுகாப்பு அலுவலர் சுந்தரமூர்த்தி தலைமையிலான குழு, ஆய்வு மேற்கொண்டனர். 30 கடைகளில் ஆய்வு மேற்கொண்டு, 36 வகையான உணவு பொருட்களின் மாதிரி பரிசோதனைக்காக எடுக்கப்பட்டது. இதில், டீத்துாள், மிக்சர் உள்ளிட்ட பொருட்கள், தரமற்றவை விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.தொடர்ந்து, சட்டப்படியான நடவடிக்கை எடுக்க, உணவு பாதுகாப்பு துறையினர் முடிவு செய்துள்ளனர்.

Categories: NEWS
%d bloggers like this: