Home > Coimbatore, DISTRICT-NEWS > உணவு பாதுகாப்பு துறையால் வாழை விவசாயிகள் மகிழ்ச்சி

உணவு பாதுகாப்பு துறையால் வாழை விவசாயிகள் மகிழ்ச்சி

4,January, 2021

உணவு பாதுகாப்பு துறை உத்தரவால், வாழை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கடந்த, பத்து மாத காலமாக கொரோனா உள்ளிட்ட காரணங்களால், ஓட்டல்கள், திருமண மண்டபங்கள் மூடியிருந்தன. இதனால் வாழைத்தாருக்கும், வாழை இலைக்கும் வியாபாரிகளிடமிருந்து, சரியான விலை கிடைக்காமல் இருந்தது.தற்போது, ஊரடங்கு தளர்வுகளால், ஓரளவு பழைய நிலை திரும்பி வருகிறது. இந்நிலையில், உணவு பாதுகாப்பு துறை, ஓட்டல்கள், தள்ளுவண்டி கடைகள், சாலையோர உணவகங்களில் உணவுப் பொருட்கள் பரிமாறவும், பார்சல் கட்டவும் பிளாஸ்டிக், பாலிதீன் பேப்பர்களை பயன்படுத்த, தடை விதித்துள்ளது.உணவுப் பொருட்களில் நச்சு கலப்பதை தவிர்க்க, உணவு பொருட்களை கட்டாயம் வாழையிலையில் தான் அளிக்க வேண்டும் என, அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். இதனால், வாழை இலையின் தேவை அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories: Coimbatore, DISTRICT-NEWS
%d bloggers like this: