Home > NEWS > சத்துணவு பணியாளர்களுக்கு உணவு பாதுகாப்பு பயிற்சி

சத்துணவு பணியாளர்களுக்கு உணவு பாதுகாப்பு பயிற்சி

4,January, 2021

உடுமலை ஒன்றிய அலுவலகத்தில், சத்துணவு அமைப்பாளர்களுக்கு, உணவு பாதுகாப்பு குறித்த பயிற்சி வகுப்பு நடந்தது.உடுமலை ஒன்றியத்தில், அரசு துவக்கம் முதல் மேல்நிலை வரை உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு சத்துணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறையின் சார்பில், உணவு பாதுகாப்பு குறித்து, அமைப்பாளர்களுக்கு ஒருநாள் பயிற்சி வகுப்பு உடுமலை ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது.கோவையை சேர்ந்த, ‘நோ புட் வேஸ்ட்’ என்ற அமைப்பினர், பயிற்சி அளித்தனர். உணவு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து, பயிற்சியாளர் சலீம் விளக்கமளித்தார். இதில், உணவு பாதுகாப்பு சட்டத்தின் வரைமுறைகள், தனி மனித சுகாதாரம்; உணவு பொருட்களை கடைகளில் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை, சுகாதாரமான முறையில் சமைப்பது, உணவு பொருட்களை பாதுகாப்பாக பராமரிப்பது, தண்ணீரின் தரம் அறிவது, உணவு வீணாவதை தவிர்ப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.உடுமலை ஒன்றிய அலுவலர்கள், சத்துணவு அமைப்பாளர் மற்றும் பணியாளர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர்

Categories: NEWS
%d bloggers like this: